/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி மலையேற்றம் துவங்கியது
/
வெள்ளியங்கிரி மலையேற்றம் துவங்கியது
ADDED : பிப் 02, 2026 06:50 AM

தொண்டாமுத்துார்: கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்ரவரி முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர். இந்தாண்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முதல் பக்தர் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், அடிவாரத்தில் உள்ள கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில், பக்தர்களுக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தியுள்ளனர். சுகாதாரத்துறையினர், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவ முகாம் அமைத்துள்ளனர். மலையேறும் பக்தர்கள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதை தடுக்க, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில், ஸ்டிக்கர் ஒட்டி, 20 ரூபாய் முன் பணமாக பெற்று வருகின்றனர். தரிசனம் முடித்து கீழே வரும் பக்தர்கள், பாட்டில்களை, வனத்துறையினரிடம் ஒப்படைத்த பின், பெற்றுக்கொள்ளலாம்.

