sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'

/

தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'

தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'

தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'


ADDED : செப் 30, 2025 12:45 AM

Google News

ADDED : செப் 30, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ணி நிமித்தமாக, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் காந்திபுரத்தில் இருந்து கிராஸ்கட் ரோடு வழியாக, ஆர்.எஸ்.புரம் சென்றனர்.

வடகோவை மேம்பாலத்தின் சுரங்கப் பாதை வழியாக சென்றபோது, தி.மு.க.அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''என்னக்கா, திடுதிப்புன்னு யாரும் எதிர்பார்க்காத நேரத்துல, மாநகர் மாவட்ட செயலாளரை மாத்திட்டாங்களே...'' என கேட்டாள்.

''ஆமாப்பா... 2021 எலக்சன்ல சிட்டிங் எம்.எல்.ஏ.,போஸ்ட்டிங்கை தவற விட்டது; 2024 லோக்சபா எலக்சன்ல சொந்த பூத்திலேயே ஓட்டு குறைவா வாங்குனதுல ஆரம்பிச்சு, கட்சி தலைமைக்கு கம்ப்ளைன்ட் மேல கம்ப்ளைன்ட் போயிருக்கு. அசெம்ப்ளி எலக்சன்ல மேற்கு மண்டலத்துல ஜெயிச்சுக் காட்டணும்னு ஆளுங்கட்சி தரப்புல, 'டார்கெட்' பிக்ஸ் பண்ணி, வேலைகள்ல மும்முரமா ஈடுபட்டுட்டு இருக்காங்க. அதனால, மா.செ.,வை மாத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு. சமுதாய ஓட்டு பாதிக்கக் கூடாதுங்கிறதுனால, அதே சமுதாயத்துல இருந்து ஒருத்தரை நியமிச்சிருக்காங்க,'' என்ற படி, வடகோவை சிந்தாமணி அருகே உள்ள பேக்கரி முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

விஜய் வர மாட்டாரா டீயை உறிஞ்சிய மித்ரா, ''நம்மூருக்கு விஜய் வர்றதா இருந்துச்சே. இனி வருவாரா... மாட்டாரா...'' என, கேட்டாள்.

''மித்து, பூத் கமிட்டி மீட்டிங்கையே நம்மூர்ல நடத்தி, 'கெத்து' காண்பிச்சவரு விஜய். ஆரம்பத்துல அடுத்த மாசம் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்த முடிவு செஞ்சு, போலீஸ் அனுமதி கேட்டு, மனு கொடுத்திருந்தாங்க. அதுக்கப்புறம் அடுத்த வருஷம் பிப்., மாசத்துக்கு தள்ளிவச்சாங்க,''.

''பப்ளிக்கிற்கு இடையூறு ஏற்படுதுன்னு, கோர்ட்டுல பொது நல வழக்கு தொடர்ந்து பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை போடுறதுக்கு, 'பிளான்' பண்ணிட்டு இருக்கறதா, செப்., 16ல் நாம பப்ளிஷ் பண்ணியிருந்தோம். எதிர்பாராத விதமா கரூர்ல நடந்த கசப்பான சம்பவம், கோர்ட் 'என்கொயரி'க்கு போயிருக்கு. இனி, கோர்ட்டுல சொல்ற தீர்ப்புக்கு தகுந்த மாதிரி, பிரசார பயணத் திட்டம் மாறும்னு விஜய் கட்சிக்காரங்க சொல்றாங்க,''

தள்ளிப்போகுது மாநாடு ''ஆளுங்கட்சி தரப்புல இளைஞரணி மாநாடு நடத்துறதுக்கு, பிளான் பண்ணிட்டு இருந்தாங்களே...''

''அதுவா... லோக்சபா எலக்சன் சமயத்துல செட்டிபாளையம் ரோட்டுல இருக்கற காலியிடத்துல பொதுக்கூட்டம் நடத்துனாங்க. அதுல, சி.எம். ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் கலந்துக்கிட்டாங்க. அந்த இடத்துல மண்டல அளவுல, மிகப்பிரமாண்டமா மாநாடு நடத்த முடிவு செஞ்சிருக்காங்க. கரூர் மாதிரி அசம்பாவிதம் நடக்காத அளவுக்கு, மாநாட்டை 'பக்கா'வா பிளான் பண்ணி நடத்தணும்னு நெனைக்கிறாங்க. அதனால, மாநாடு தேதி தள்ளிப்போகும்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க,'' என்றபடி, கேன்டீனை விட்டு வெளியே வந்தாள் சித்ரா.

கதர்ச்சட்டையினர் சங்கடம் மித்ரா, ''கதர்ச்சட்டை கட்சியில நிர்வாகிகளை மாத்துனதுனால, கட்சிக்காரங்க சங்கடத்துல இருக்காங்களாமே...'' என கேட்டாள்.

''அதுவா, நம்மூர்ல கதர்ச்சட்டை கட்சியை வழிநடத்துன, மூணு நிர்வாகிகளையும் ஒரே நேரத்துல மாத்திட்டாங்க. ரூரல்ல அந்த நிர்வாகிகளே அவங்க சொந்த பணத்தை செலவழிச்சு, அடிக்கடி நிகழ்ச்சி நடத்திட்டு இருந்தாங்க. தொண்டர்களும் 'ஆக்டிவ்'வா செயல்பட்டாங்க. திடுதிப்புன்னு நிர்வாகிகளை மாத்துனதும், கதர்ச்சட்டை கட்சிக்காரங்க 'அப்செட்' ஆகிட்டாங்க. எலக்சன் சமயத்துல நிர்வாகிகளை மாத்திட்டாங்களேன்னு, விரக்தியில இருக்காங்க,''

உருட்டும், திருட்டும்! ''அதெல்லாம் இருக்கட்டும். 'ஓரணியில் தமிழ்நாடு'ங்கிற பெயரில தி.மு.க.,காரங்க வீடு வீடா போன மாதிரி, அ.தி.மு.க., தரப்பிலும் போகப்போறாங்களாமே...''

''அதுவா... 'தி.மு.க.,வின் உருட்டுகளும், திருட்டுகளும்'னு தலைப்பிட்டு அ.தி.மு.க., தரப்புல நோட்டீஸ் அச்சடிச்சிருக்காங்க. மேட்டுப்பாளையம் ஏரியாவுல ஐ.டி., விங்க் மூலமா பூத் ஏஜன்ட்டுகளுக்கு டிரெய்னிங் கொடுத்திருக்காங்க.

100 ஓட்டுக்கு ஒருத்தருன்னு நியமிச்சு, வீடு வீடா போயி, நோட்டீஸ் கொடுக்கப் போறாங்களாம். 'டிரையல்' போயிக்கிட்டு இருக்கு. மிக முக்கியமா, தி.மு.க., கவர்மென்ட்டுக்கு, 10க்கு எத்தனை மார்க் போடுவீங்கன்னு எழுதி வாங்கப் போறாங்களாம். இதனால, மேட்டுப்பாளையம் ஏரியாவுல தேர்தல் களம் சூடுபிடிச்சிருக்கு,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''துடியலுார் டியூகாஸ்ல அப்படி என்னதான் நடந்துச்சு. கோடிக்கணக்குல முறைகேடு நடந்திருக்குன்னு சொல்றாங்களே...'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமா, மித்து! போலி நகைகளை அடமானம் வச்சு, 3.5 கோடி ரூபாயை எடுத்திருக்காங்க. இந்த விவகாரம் டியூகாஸ் சொசைட்டியில பத்திக்கிட்டு எரியுது. இந்த சொசைட்டியில ரெண்டு கோஷ்டி இருக்கு. உயரதிகாரிகளுக்கு ஒருத்தரு மேல ஒருத்தரு மொட்டை பெட்டிஷன் போடுறது ஜாஸ்தியாகிடுச்சு.

லேடி ஊழியர்களை பத்தி, அவதுாறு கெளப்புற மாதிரியும் மொட்டை பெட்டிசன் போயிருக்கு. பாதிக்கப்பட்டவங்க துடியலுார் போலீஸ் ஸ்டேஷன்ல, கம்ப்ளைன்ட் கொடுத்தும் ஆக்சன் எடுக்கலையாம். அதனால, யார்கிட்ட முறையிடுறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க,''

போதை போலீசார் ''காவல்துறையில எந்த வேலையும் செய்யாம மத்தவங்கள நாட்டாமை செய்றாராமே...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''ஆமாப்பா... அந்த கூத்தை ஏன் கேக்குறே. காட்டூர் போலீஸ் ஸ்டேஷன்லதான் இந்த விவகாரம். எந்த வேலையும் செய்யாம இருக்கற அவரு, மத்த போலீஸ்காரங்கள அதிகார தோரணையில மிரட்டுறாராம். கொஞ்ச நாளா, 'சரக்கு' அடிச்சிட்டு, ஸ்டேஷனுக்கு வர்றாராம். இதைப்பத்தி யாராச்சும் கேட்டா, 'உன் வேலையை பார்'ன்னு, தெனாவட்டா சொல்றாராம்,''

''இவருக்கு கம்பெனி கொடுக்கற விதமா, எஸ்.எஸ்.ஐ.,க்கள் ரெண்டு பேரு சேர்ந்திருக்காங்களாம். டியூட்டி நேரத்துல, 'சரக்கு' அடிச்சிட்டு வந்து தொல்லை பண்றதா மத்த போலீஸ்காரங்க சொல்றாங்க. ரெண்டு எஸ்.எஸ்.ஐ.,களும் மொபைல் டியூட்டி பார்க்குறாங்க.

ஏரியாவுல நல்லா பழக்கம் இருக்கறதுனால, எப்பவும் கலெக்சன்ல குறியா இருக்காங்க. தீபாவளி நெருங்குறதுனால யார் யார்கிட்ட, எவ்ளோ வசூலிக்கிறதுனு ஒரு 'லிஸ்ட்' ரெடி பண்ணி வச்சிருக்காங்களாம்.

காந்திபுரம் ஏரியாவுல லாட்ஜ், ஓட்டல், கடைகள் நிறையா இருக்கறதுனால, ஒவ்வொரு எடத்துலயும் எவ்வளவு கறக்கலாம்னு பக்காவா பிளான் போட்டு வச்சிருக்காங்களாம்,''

கலெக்சன் ஆரம்பம் ''இவுங்க... பிளான் தான் பண்றாங்க. மதுவிலக்கு போலீஸ்காரங்க தீபாவளி கலெக்சனை ஆரம்பிச்சிட்டாங்களாம்,'' என்ற மித்ரா, ''எல் அண்டு டி பைபாஸ் பக்கத்துல இருக்குற 'டாஸ்மாக்' பார் ஒன்னு, லைசென்ஸ் இல்லாம செயல்படுது. 24 நேர சர்வீஸ்ங்கிற முறையில எந்நேரமும் 'சரக்கு' சேல்ஸ் நடக்குது.

இவுங்கள கட்சிக்காரங்க மிரட்டி, மாசம் ஒன்னுல இருந்து ஒன்றரை 'ல'கரம் வரை தரணும்னு நெருக்கடி கொடுக்குறாங்களாம். இப்போ, மதுவிலக்கு போலீஸ்காரங்க தரப்புலயும், தீபாவளி கலெக்சன் ஆரம்பிச்சிட்டாங்க. கடைக்கு 20 ஆயிரத்துல இருந்து, 30 ஆயிரம் வரைக்கும் வசூலிக்கிறாங்க. 'பார்' ஏலம் எடுத்த உரிமையாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க,''

''அப்படியா...'' என கேட்ட சித்ரா, ''அமைப்புகள் பெயரைச் சொல்லி, பிரைவேட் ஹாஸ்பிடல்ல ஒரு குரூப் வசூல்ல ஈடுபடுதாமே...'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். பிரபலமான பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு அந்த குரூப் போகுது. 'மெடிக்கல் கேம்ப் நடத்த பிளான் பண்ணியிருக்கோம். அண்ணன், 'ஒரு ரூபா' வாங்கிட்டு வரச்சொன்னாரு'ன்னு, ரஜினி முருகன் திரைப்படத்தில் வர்ற ஏழரை முருகன் ரேஞ்ச்க்கு, 'அட்ராசிட்டி' பண்றாங்களாம்,''

''எந்த இடத்துல முகாம் நடத்தணும்னு சொல்லுங்க; நாங்களே நடத்துறோம்னு மருத்துவமனை நிர்வாகத்தினர் சொன்னா அதை ஏற்கறதில்லையாம். 'என்ன விவரம் புரியாம இருக்கீங்க. நாங்க எதுக்கு வந்துருக்கோம்னு தெரியலையா' என, நேரடியா மிரட்ட ஆரம்பிக்கிறாங்க.

கேட்டத் தொகையை கொடுக்கலைன்னா, வெவ்வேற ரூபத்துல பகிரங்கமாவே மிரட்டுறதா ஹாஸ்பிடல் தரப்புல சொல்றாங்க. இது சம்பந்தமா போலீஸ்காரங்க 'என்கொயரி' செஞ்சிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா. பேக்கரியில் இருந்து வெளியே வந்த சித்ரா, ஆர்.எஸ்.புரம் நோக்கி, ஸ்கூட்டரை செலுத்தினாள்.

பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, மொபைல் போனை நோண்ட ஆரம்பித்தாள்.






      Dinamalar
      Follow us