UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:56 PM
கோவை: கோவை வி எல் பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘விப்ரா ’26’ நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை, ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்த 43 உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 356 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் அறிவு மற்றும் திறமையை சோதிக்கும் வகையில் கோட் ரஷ், மிஷன் கனெக்டட், கேஸ் க்ளோஸ்டு, ஸ்டார்ட் அப் வேட்டை, பிட்-பாஸ், புல்ஸ் அண்ட் பியர்ஸ், ராக்ஸ் டு ரிச்சஸ், மில்லெட் மிஸ்ட்ரி, ரீ-பிராண்ட், லிட்டரரி எஸ்கேப் ரூம் உள்ளிட்ட 11 போட்டிகள் நடத்தப்பட்டன.
நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் ஜெயஸ்ரீ சூர்யகுமார் பேசுகையில், மாணவர்களின் அறிவு, படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனைகள் நிஜ வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
