/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஜயா வாசகர் வட்டம் சார்பில் மொழிபெயர்ப்பு விருது அறிவிப்பு
/
விஜயா வாசகர் வட்டம் சார்பில் மொழிபெயர்ப்பு விருது அறிவிப்பு
விஜயா வாசகர் வட்டம் சார்பில் மொழிபெயர்ப்பு விருது அறிவிப்பு
விஜயா வாசகர் வட்டம் சார்பில் மொழிபெயர்ப்பு விருது அறிவிப்பு
ADDED : ஜூலை 14, 2025 11:34 PM
கோவை; கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில், 2025ம் ஆண்டுக்கான கே.எஸ்.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியன் நினைவாக, விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில், ஆண்டு தோறும் இரண்டு மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.
தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழியில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு விருதுகள், 'பெட்ரோ பராமோ' என்ற ஆங்கில நுாலை, தமிழுக்கு மொழியாக்கம் செய்த பேராசிரியர் கார்த்திகைப் பாண்டியன், தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்த கேரளாவை சேர்ந்த மருத்துவப் பேராசிரியர் ரகுராம் ஆகியோர் இந்த ஆண்டுக்கான விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுகள் வழங்கும் விழா, அடுத்த மாதம் 24ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. இதில், கேரள அரசின் வருவாய்த்துறை செயலர் ராஜமாணிக்கம். புரவலர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விருதுகளை வழங்க உள்ளனர்.