/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை - கோவை, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள்
/
சென்னை - கோவை, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள்
ADDED : செப் 05, 2024 06:49 AM

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை - கோவை, தாம்பரம் - கேரளா மாநிலம், கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
l தாம்பரத்தில் இருந்து வரும், 6, 13, 20ம் தேதிகளில், இரவு 7:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடையும்
l கொச்சுவேலியில் இருந்து வரும், 7, 14, 21ம் தேதிகளில் மாலை 3:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்
l தாம்பரத்தில் இருந்து வரும் 8, 15, 22ம் தேதிகளில் இரவு 9:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்
l கொச்சுவேலியில் இருந்து வரும், 9, 16, 23ம் தேதிகளில், மாலை 3:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை. 7:35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்
l சென்ட்ரலில் இருந்து வரும், 6ம் தேதி மாலை 3:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாள் இரவு 11:45 மணிக்கு கோவை சென்றடையும்
l கோவையில் இருந்து வரும், 8ம் தேதி இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:35 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கி விட்டதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.