/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறும் தனியார் பஸ்கள்; விபத்து ஏற்படும் அபாயம்
/
விதிமீறும் தனியார் பஸ்கள்; விபத்து ஏற்படும் அபாயம்
விதிமீறும் தனியார் பஸ்கள்; விபத்து ஏற்படும் அபாயம்
விதிமீறும் தனியார் பஸ்கள்; விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : நவ 01, 2024 10:09 PM
கிணத்துக்கடவு ; பொள்ளாச்சி - கோவை ரோட்டில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் போக்குவரத்து விதிமீறுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், பெரும்பாலான தனியார் பஸ்கள் போக்குவரத்து விதிகளை மீறுவது வாடிக்கையாகிவிட்டது. ரோட்டில் பயணிக்கும் போது 'ஸ்டேஜ்' மற்றும் ஸ்டாப்களில் பஸ்களை நிறுத்தாமல், நடு வழியில் திடீரென பயணியரை ஏற்றி, இறக்க நிறுத்துகின்றனர். இதனால், பஸ்சை பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
குறிப்பாக, பைக், கார் ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது பஸ் அருகே வந்தால் அச்சப்படுகின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி - கோவை ரோட்டில், பெரும்பாலும் 70 முதல் 100 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களை திடீரென பிரதான ரோட்டிலேயே நிறுத்துவதால், பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் இது போன்ற செயல்களை கவனித்து, விதிமீறும் தனியார் பஸ்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.