/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா பயணியர் ரோட்டில் 'டான்ஸ்' புலிகள் காப்பகத்தில் விதிமீறல்
/
சுற்றுலா பயணியர் ரோட்டில் 'டான்ஸ்' புலிகள் காப்பகத்தில் விதிமீறல்
சுற்றுலா பயணியர் ரோட்டில் 'டான்ஸ்' புலிகள் காப்பகத்தில் விதிமீறல்
சுற்றுலா பயணியர் ரோட்டில் 'டான்ஸ்' புலிகள் காப்பகத்தில் விதிமீறல்
ADDED : செப் 23, 2025 08:34 PM

வால்பாறை, ; வால்பாறை - சிறுகுன்றா ரோட்டில், சுற்றுலாபயணியர் விதிமுறை மீறி ரோட்டில் 'டான்ஸ்' ஆடினர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வனவளம் மற்றும் வன விலங்குளை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும், வனத்தில் அத்துமீறி நுழையவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், வால்பாறையில் தற்போது குளுகுளு சீசன் நிலவும் நிலையில், இயற்கையை கண்டு ரசிக்கும் வகையில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.
இவர்கள் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளியில் மது அருந்துவதும், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை திறந்தவெளியில் வீசி செல்வதால், சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுகுன்றா ரோட்டில் நேற்று காலை வாகனத்தில் வந்த சுற்றுலா பயணியர் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி, 'டான்ஸ்' ஆடினர். சிறிது நேரத்துக்கு பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் இயற்கையை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். வனவிலங்குகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது.
புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட எந்த பகுதியிலும் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி 'டான்ஸ்' ஆடவோ, சமையல் செய்யவோ கூடாது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பாதை போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.