ADDED : மார் 19, 2026 04:08 PM

அன்னுார்: 'நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வி வாழ்வில் உயர்வு தரும்' என, பள்ளி விழாவில் தெரிவிக்கப்பட்டது.
காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் புல்லாணி, இருதய மரிய ஜோசப் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் வரவேற்றார். ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேசுகையில், ''கல்வியுடன் நல்லொழுக்கம் முக்கியம். நல் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வாழ்வில் உயர்வு தரும். தமிழ் இலக்கியம் மற்றும் நன்னெறி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்,'' என்றார்.
'சிபி' ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் அரங்க கோபால், அகில இந்திய மக்கள் உரிமைக் கழக நிறுவனர் குமார் ஆகியோர் பேசினர். நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர் செந்தில்குமார் தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
