/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
/
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
ADDED : செப் 30, 2024 04:47 AM

கோவை, : கோவை சாரதாம்பாள் கோவில் மண்டபத்தில், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
விஷ்வ விஷ்ணு சகஸ்ரநாம அமைப்பு (விஷ்வா) கோவை கிளை சார்பில், ஆண்டுதோறும் நடைபெறும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயண சத்சங் நிகழ்ச்சி, கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் மண்டபத்தில், நேற்று நடந்தது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு துவங்கிய பாராயணம், தொடர்ந்து மாலை 4:00 மணி வரை நடந்தது. இதில் விஷ்வா அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகளுடன், சாரதாம்பாள் கோவில் வேத பாடசாலை குழந்தைகள், பொதுமக்கள், மகளிர் உள்ளிட்டோர் பங்கேற்று விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.
வருங்கால சந்ததிகளுக்கு ஆன்மிகத்தையும், தெய்வீகத்தையும் உணர்த்துவதற்காக தொடர்ந்து இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக, விஷ்வா அமைப்பினர் தெரிவித்தனர்.