ADDED : ஆக 29, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
சாய்பாபாகாலனி: காமாட்சியம்மன் கோவிலில் உள்ள விஸ்வகர்மா ஐந்தொழிலாளர் சேவா மன்றத்தில் அவிட்ட நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், சிராவண பண்டிகை எனும் ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விநாயகர் பூஜை, மஹாயாஹம், தீபாராதனை நடந்தது. பின்னர், விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு பூணுால் அணிவித்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் விஸ்வகர்மா, காயத்திரிதேவி அருள்பெற்றனர். விஸ்வகர்மா மன்ற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
