/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்
/
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்
ADDED : நவ 09, 2025 11:06 PM

வால்பாறை: வால்பாறையில், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
தேர்தல் ஆணைய உத்தரவுபடி, 100 சதவீதம் தவறில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில், சிறப்பு தீவிர திருத்தும் பணி,வால்பாறை சட்ட சபை தொகுதியில் கடந்த 4ம் தேதி துவங்கியது.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும், திருத்தப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது தவிர வெள்ளிமுடி, காடம்பாறை, பாலகணாறு, நெடுஞ்குன்றம், சங்கரன்குடி, கல்லார்குடி உள்ளிட்ட அனைத்து செட்டில்மெண்ட் பகுதியிலும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்காளர் பட்டியில் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரது வீட்டிற்கும், அந்தந்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயதுடைய அனைவரையும் கட்டாயம் வாக்காளர்களாக இணைக்க வேண்டும்.
கடந்த, 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி, தற்போதைய பட்டியலில் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். இதற்காக அவர்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர் வீடுகளுக்கு செல்லும் போது வீடு பூட்டியிருந்தாலோ வேலைக்கு சென்றிருந்தாலோ, வேறு ஒரு நாளில் படிவம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

