/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி சூலுாரில், 79 சதவீதம் நிறைவு
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி சூலுாரில், 79 சதவீதம் நிறைவு
வாக்காளர் பட்டியல் திருத்த பணி சூலுாரில், 79 சதவீதம் நிறைவு
வாக்காளர் பட்டியல் திருத்த பணி சூலுாரில், 79 சதவீதம் நிறைவு
ADDED : டிச 03, 2025 07:29 AM

சூலுார்: சூலுார் தொகுதியில், வாக்காளர் பட்டியல் திருத்த பணி, 79 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட, 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. சூலுார் சட்டசபை தொகுதியில், உள்ள, 333 ஓட்டு சாவடிகளில் உள்ள, வாக்காளர்களுக்கு, ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் படிவங்களை கொடுத்து, திரும்ப பெற்று வருகின்றனர்.
டிச., 4 ம்தேதி படிவங்களை ஒப்படைக்க கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அது, 11 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், இறுதி கட்ட பணிகள் தீவிரமடைந் துள்ளன. வாக்காளர்களிடம் திரும்ப பெறப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவை ஓட்டுச்சாவடி வாரியாக பிரித்து, சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்த சூலுார் தொகுதி நோடல் அதிகாரி முருகேசன் கூறுகையில், சூலுார் தொகுதியில், 3 லட்சத்து, 38 ஆயிரத்து, 847 வாக்காளர்கள் உள்ளனர். 333 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட, 79 சதவீத படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை இரண்டாம் முறையாக ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. எஞ்சியுள்ள பணிகள் ஓரிரு நாளில் நிறைவு பெறும். பி.எல்.ஓ., க்கள், மேற்பார்வையாளர்கள், பிற துறை பணியாளர்கள் என, 500 க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்,' என்றார்.

