/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 'விறு விறு'
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 'விறு விறு'
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 'விறு விறு'
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 'விறு விறு'
ADDED : நவ 17, 2025 12:29 AM

சூலுார்: வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சூலுாரில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகம் முழுக்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது. ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், வீடு, வீடாக சென்று, மக்களிடம் படிவங்களை வழங்கி வருகின்றனர்.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சூலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான செந்தில்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பழனிக்குமார், மண்டல துணை தாசில்தார் அம்பிகா மற்றும் அலுவலர்கள் பொதுமக்களுக்கு திருத்தப்பணியின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் நோட்டீஸ்களை வழங்கினர். பேரூராட்சி தலைவர் தேவி, துணைத்தலைவர் கணேஷ் மற்றும் ஊழியர்களும் நோட்டீஸ் வழங்கினர்.
தூய்மையான, உண்மையான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். உங்கள் ஓட்டுரிமையை உறுதி செய்ய, சிறப்பு திருத்தத்தில் இணையுங்கள். சிறப்பு தீவிர திருத்தம் ஒவ்வொரு வாக்காளருக்கும் முக்கியமானது. உங்களது வாக்காளர் பதிவு என்பது உங்களது உரிமை என, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அன்னுார் அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 117 ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
முகாமில் படிவம் விநியோகித்தல், நிரப்பப்பட்ட படிவத்தை திரும்ப பெறுதல், படிவம் நிரப்புதலில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்தல் ஆகிய பணிகள் நடந்தன.அன்னுார் தாசில்தார் யமுனா, தேர்தல் துணை தாசில்தார் ஆகாஷ் ஆகியோர் அன்னுார் பேரூராட்சியில் ஓட்டு சாவடிகளில் பணிகளை ஆய்வு செய்தனர்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் படிவம் விநியோகித்தல் மற்றும் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'அன்னுார் ஒன்றியத்தில் 117 ஓட்டு சாவடிகளில் 90 சதவீதம் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு நிரப்புவதற்கு உரிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரப்பப்பட்ட படிவங்களை திரும்பப் பெறும் பணியும் நடந்து வருகிறது. படிவம் நிரப்புவதில் சந்தேகம் இருந்தால் தங்கள் பகுதி ஓட்டு சாவடி நிலை அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்,' என்றனர்.

