/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புதிய கட்சிக்கு ஓட்டு போட்டால் தி.மு.க.வுக்கு வாய்ப்பாகி விடும்'
/
'புதிய கட்சிக்கு ஓட்டு போட்டால் தி.மு.க.வுக்கு வாய்ப்பாகி விடும்'
'புதிய கட்சிக்கு ஓட்டு போட்டால் தி.மு.க.வுக்கு வாய்ப்பாகி விடும்'
'புதிய கட்சிக்கு ஓட்டு போட்டால் தி.மு.க.வுக்கு வாய்ப்பாகி விடும்'
ADDED : மார் 05, 2026 05:02 AM

சிங்காநல்லூர்: சிங்காநல்லூரில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில், 500 பேருக்கு ஹெல்மெட், 50 பேருக்கு அயர்ன்பாக்ஸ், தையல் இயந்திரம், மூன்று பேருக்கு பெட்டிக்கடை, மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஜெ.,பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், “நாங்கள் செய்த திட்டங்களை பட்டியலிட முடியும். தி.மு.க.வால் முடியுமா? புதிதாக ஆரம்பித்த கட்சிக்கு ஓட்டுப்போட்டால் அது தி.மு.க.வுக்கு வாய்ப்பாகி விடும். மக்களைப் பாதுகாக்க அ.தி.மு.க., ஆட்சியால்தான் முடியும்,” என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் ஜெயராம், அம்மன் அர்ச்சுணன், முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.