/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மின்னணு மெஷினில் ஓட்டுப்பதிவு!

ADDED : செப் 20, 2024 10:24 PM

கோவை : கோவை பீளமேடு காந்தி மாநகரில் உள்ள, அரசு உயர் நிலைப்பள்ளியில், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் பேரவை தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் முதல் முறையாக மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தி மாணவர்கள் ஓட்டு போட்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி கூறியதாவது:
பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடத்துவது வழக்கம். இந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் முதல் முறையாக மின்னணு வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி, மாணவர்கள் வாக்களித்துள்ளனர்.
தேர்தலில் ஓட்டு போடு வதின் முக்கியத்துவம், ஓட்டு இயந்திரத்தை எவ் வாறு பயன்படுத்துவது மற்றும் ஒட்டு இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து, மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இதில், 10ம் வகுப்பு மாணவர் கவுதம் தலைவராகவும், மாணவி கிரேஸ் பிரின்சி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.