UPDATED : நவ 26, 2026 07:24 PM
ADDED : நவ 26, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
நெகமம்: நெகமம் அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெகமம், காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி, 52. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால், இவரது மனைவி நெகமத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், மனைவியை வீட்டுக்கு அழைத்து வர சென்றார். அப்போது அவர், வேலுச்சாமி உடன் வர மறுத்ததால், தனிமையில் இருந்தார். இதனால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
