ADDED : செப் 23, 2026 10:03 PM
தொண்டாமுத்தூர்: தமிழக அரசு, ஊழலை ஒழித்துக் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கட்சி, ஜாதி, மதம் சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி, முதல்வர் விஜய்க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில், அரசுத் துறைகளில் ஊடுருவியுள்ள ஊழலால் எண்ணற்ற விபரீதங்கள் நடக்கின்றன. வரலாறு காண சீர்கேடுகளுக்கு அரசு அலுவலர்கள் காரணம். அரசு அலுவலர்கள், மாத சம்பளத்தை விட பன்மடங்கு அதிக லஞ்சம் வாங்கி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கின்றனர்.
லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் சட்டப்படி இருக்க வேண்டியது சிறையில் தான். அரசு கஜானாவுக்கு சேர வேண்டிய வருவாய் ஊழலுக்கு இரையாகிறது. முதல்வர், ஊழலை ஒழித்து, நேர்மையான நிர்வாகத்தை நிலை நிறுத்த வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேணடும் என கூறப்பட்டுள்ளது.
