ஓடையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரம் பாதிப்பு
ஓடையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஆக 24, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை தங்கம்மாள் ஓடையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை தங்கம்மாள் ஓடையில் கழிவு நீர் கலந்து வருவதோடு, குப்பை, கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனைத்தடுக்கும் வகையில், நகராட்சி சார்பில், தங்கம்மாள் ஓடை ரோடு பகுதியில், கம்பி வேலி அமைக்கப்பட்டது.
ஆனால், பொள்ளாச்சி ரோடு பகுதியில் கம்பி வேலி அமைக்கப்படாத நிலையில், ரோடு பகுதியிலிருந்து, குப்பை மற்றும் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் நேரடியாக ஓடையில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால், கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி வருவதோடு, மழை பெய்தால், கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, தங்கம்மாள் ஓடையை முழுமையாக துார்வாரவும், கழிவுகளை கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
