/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்
/
குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்
ADDED : நவ 08, 2024 11:45 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில், குழாய் உடைந்து குடிநீர் விரயமாகியது.
பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளயைம் ஆழியாறு ஆற்றில் இருந்து, நகராட்சி, கிராமங்கள், பேரூராட்சிகளுக்கு பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதில், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், குறிச்சி, குனியமுத்துார் மற்றும், 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள், கிருஷ்ணா குளம் அருகே செல்கின்றன.
அதில், கிருஷ்ணா குளத்தையொட்டி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக விரயமாகிறது. பல நாட்களாக செல்லும் இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராமங்களுக்கு முறையாக குடிநீர் செல்வதில் இடையூறு ஏற்படும். நீர் வீரயமாகுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.