ADDED : செப் 24, 2026 06:53 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டியில் காலியிடத்தில் தேங்கி கிடக்கும் கழிவுகளால் சுகாதாரம் பாதிப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி வ.உ.சி., வீதி குடியிருப்பு பகுதியில் உள்ள காலியிடம் புதர் மண்டி காட்சியளிக்கிறது. அங்கு. குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
காலியிடத்தில் புதர் வளர்ந்துள்ளதால், விஷ பூச்சிகள் அதிகம் உள்ளன. குடியிருப்போர் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. பல நாட்களாக குப்பை குவிந்துள்ளதால், சுகாதார பாதிப்பு நிலவுகிறது.
பேரூராட்சி வாயிலாக குப்பை அகற்றப்படாமல் உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி வாயிலாக முறையாக அகற்ற நடவடிக்கை எடுத்து, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
