ADDED : செப் 14, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
உடுமலை: ஜி.டி.வி., லே–அவுட் பிரதான ரோட்டில் சாக்கடை கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஜி.டி.வி., லே–அவுட், நான்கு ரோடு சந்திப்பில், திறந்தவெளி சாக்கடை கால்வாய் உள்ளது. அங்குள்ள பாலம் மேம்பாட்டு பணிகளின் போது கால்வாயை அடைத்துள்ளனர்.
பணிகள் நிறைவு பெற்றும் கழிவு நீர் செல்லும் வகையில், கால்வாயை அடைப்பை சீராக்கவில்லை. இதனால், கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கியுள்ளது. சாக்கடை கால்வாயை சீரமைத்து, கழிவு நீரை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.
