/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருச்சி ரோட்டில் ஆறு இடங்களில் குடிநீர் வீண் மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
/
திருச்சி ரோட்டில் ஆறு இடங்களில் குடிநீர் வீண் மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
திருச்சி ரோட்டில் ஆறு இடங்களில் குடிநீர் வீண் மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
திருச்சி ரோட்டில் ஆறு இடங்களில் குடிநீர் வீண் மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 01, 2025 11:37 PM

கோவை: திருச்சி ரோட்டில் அடுத்தடுத்து ஆறு இடங்களில் குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில், 24 மணி நரேமும் குடிநீர் வழங்கும் விதமாக வீடுகளுக்கு குழாய் இணைப்பு, ரோடுகளில் பிரதான குழாய் பதிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. திருச்சி ரோட்டில் தற்போது பிரதான குழாய் பதிக்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.
அதேசமயம், அழுத்தம் காரணமாக ரோடுகளில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதும் தொடர்கதையாக உள்ளது.
திருச்சி ரோட்டில் செல்லும் பில்லுார் பிரதான குழாய் வாயிலாக ராமநாதபுரம், சிங்காநல்லுார், புலியகுளம், ஒண்டிப்புதுார் உள்ளிட்ட இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் இருந்து ஒண்டிப்புதுார் நோக்கி செல்லும் வழித்தடத்தில் அடுத்தடுத்து ஐந்து இடங்களிலும், குழாய் உடைந்து குடிநீர் வீணாகிவருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே சுங்கம் செல்லும் ரோட்டில் ஒரு இடத்திலும் குழாய் உடைந்துள்ளது.
திருச்சி ரோட்டில் அடுத்தடுத்து, ஆறு இடங்களிலும் குழாய் உடைந்து இரவு நேரங்களில் குடிநீர் வீணாகி வருகிறது. அதாவது, ஆல் இந்தியா ரேடியோ பஸ் ஸ்டாப் அடுத்து சில மீட்டர் துாரத்தில், சுங்கம் செல்லும் ரோட்டில் குழாய் உடைந்துள்ளது.
அதேபோல், ராமநாதபுரம் சிக்னல் அடுத்து வண்டி முனியப்பர் கோவில் அருகே உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து வருகிறது.
அதற்கு அடுத்து சில மீட்டர் தொலைவில் அல்வெர்னியா பள்ளி அருகே, அதற்கு அடுத்து மேம்பாலம் இறங்கும் இடத்தில் இடது புறம் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகிறது.
தொடர்ந்து, சிங்காநல்லுாரில் மாநரகராட்சி கிழக்கு மண்டலம் எதிரே அருகருகே இரு இடங்களில் குழாய் உடைந்துள்ளது.
இந்த இடங்களில் பல நாட்களாகவே குடிநீர் வீணாகி வருகிறது. பருவ மழை நன்கு பெய்தாலும் சிறுவாணியில் நீர் கசிவை காரணம் காட்டி, 50 அடி வரை தண்ணீர் தேக்க கேரள நீர்ப்பாசன துறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.
இந்த அணையில் நீர் மட்டம் குறையும்போது, பில்லுார் அணையே கோவை மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
எனவே, குழாய் உடைந்த இடங்களில் உடனடியாக சரி செய்து இரவு, பகலாக தண்ணீர் வீணாவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பு.

