/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் உற்பத்திக்கு நீர் திறப்பு சோலையாறு நீர்மட்டம் சரிவு
/
மின் உற்பத்திக்கு நீர் திறப்பு சோலையாறு நீர்மட்டம் சரிவு
மின் உற்பத்திக்கு நீர் திறப்பு சோலையாறு நீர்மட்டம் சரிவு
மின் உற்பத்திக்கு நீர் திறப்பு சோலையாறு நீர்மட்டம் சரிவு
ADDED : ஜன 17, 2025 11:47 PM

வால்பாறை; மழைப்பொழிவு குறைந்த நிலையில், மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
வால்பாறையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறையில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து, வெயில் நிலவுவதால், பி.ஏ.பி., அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து, நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
மேலும், மின் உற்பத்திக்காக சோலையாறு அணையில் இருந்து வினாடிக்கு, 1,224 கனஅடி தண்ணீர் வீதம் திறந்து விடுவதால், 160 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 97.14 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு, 13.54 கனஅடி தண்ணீர் மட்டுமே வரத்தாக உள்ளது.