/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அணைகளின் நீர்மட்டம் சரிவு; பி.ஏ.பி., விவசாயிகள் கவலை
/
அணைகளின் நீர்மட்டம் சரிவு; பி.ஏ.பி., விவசாயிகள் கவலை
அணைகளின் நீர்மட்டம் சரிவு; பி.ஏ.பி., விவசாயிகள் கவலை
அணைகளின் நீர்மட்டம் சரிவு; பி.ஏ.பி., விவசாயிகள் கவலை
ADDED : ஜன 31, 2025 11:31 PM

வால்பாறை; பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வால்பாறையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக வால்பாறையில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுவதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை நிலவரப்படி, 52.13 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 12 கனஅடி தண்ணீர் மட்டுமே வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,017 கனஅடி தண்ணீர் வீதம், பரம்பிக்குளம் அணைக்கு மின் உற்பத்திக்காக திறந்து விடப்பட்டது.
இதேபோல், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 96.25 அடியாகவும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில், 69.61 அடியாகவும் இருந்தது. அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவதால், பி.ஏ.பி., விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.