/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு
/
கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு
கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு
கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு
ADDED : அக் 02, 2025 07:29 AM

வால்பாறை: வால்பாறை அருகே, கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு இரு மாநில ஒப்பந்தப்படி நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில், மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணைகள் உள்ளன. ஆண்டு தோறும் பருவமழை பெய்யும் போது, மேல்நீராறு, கீழ்நீராறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், சோலையாறு அணைக்கு திறந்துவிடப்படுகிறது.
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் இந்த அணைகள் இருப்பதால், இரு மாநில ஒப்பந்தப்படி, சோலையாறு அணையிலிருந்து ஆண்டு தோறும், 12.3 டி.எம்.சி.,தண்ணீர் கேரளாவுக்கு வழங்க வேண்டும். இதே போல், கீழ்நீராறு அணையிலிருந்து அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு கேரளாவுக்குதொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
கீழ்நீராறு அணையிலிருந்து, ஒரு மதகு வழியாக நேற்று காலை முதல்கேரளாவுக்கு வினாடிக்கு, 206 கனஅடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சின்ராஜ் மற்றும் கேரள மாநில நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் எதிர்ப்பு கேரள மாநிலத்தில், இடைமலையாறு அணை கட்டிமுடிக்கப்பட்டு, அம்மாநில பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால், பி.ஏ.பி., ஒப்பந்தப்படி கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு வழங்கும் தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும்.
மேலும், ஆனைமலை - நல்லாறு அணை திட்டங்களை செயல்படுத்தும் வரை, கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் வழங்க கூடாது, என, பி.ஏ.பி., விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.