UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:04 PM

அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: ஆலாங்கொம்பு சாலையில் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
சிறுமுகையை அடுத்த ஆலாங்கொம்பு வழியாக செல்லும் பவானி ஆற்றில் இருந்து, ஊராட்சிகளின் குடிநீர் திட்டங்களுக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. தண்ணீர் கொண்டு செல்லும் பல குழாய்கள், தென் திருப்பதி நால்ரோடு சாலையில் பதிக்கப்பட்டு உள்ளன. இதில், ஆலாங்கொம்பு எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து, தென் திருப்பதி செல்லும் சாலையில், சிறிது துாரத்தில், ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தி, குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என, ஆலாங்கொம்பு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
