/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.24.5 கோடியில் நீரேற்று நிலையம் புதுப்பிப்பு: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்
/
ரூ.24.5 கோடியில் நீரேற்று நிலையம் புதுப்பிப்பு: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்
ரூ.24.5 கோடியில் நீரேற்று நிலையம் புதுப்பிப்பு: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்
ரூ.24.5 கோடியில் நீரேற்று நிலையம் புதுப்பிப்பு: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்
ADDED : நவ 11, 2025 10:40 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடந்த, 1948ம் ஆண்டு நகரில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில் உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் ஆழியாறு ஆற்றை ஆதாரமாக கொண்டு, குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. மொத்தம், 5.5 ஏக்கர் பரப்பளவில், தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் இருந்து, பம்பு செட்டுகள் வாயிலாக நீர் உறிஞ்சப்படுகிறது. 1975, மற்றும் 1994ம் ஆண்டு கட்டப்பட்ட, 22.67 மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட தொட்டி வாயிலாக நீர் வடிக்கப்படுகிறது.
அங்கிருந்து கொண்டு வரப்படும் குடிநீர், நகரில் உள்ள ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் வாயிலாக மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொது இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல் தண்ணீரும் வினியோகிக்கப்படுகிறது.
அம்பராம்பாளையம் ஆற்றில் நீரேற்று நிலையம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இந்நிலையில், நீரேற்று நிலையம் புதுப்பிக்க அரசு, 24.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.இதற்கான பூமி பூஜை நடந்தது. எம்.பி. ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் குமரன், துணை தலைவர் கவுதமன் மற்றும் கவுன்சிலர்கள், நகர பொறுப்பாளர்கள் நவநீத கிருஷ்ணன், அமுதபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 24.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.அம்பராம்பாளையத்தில் தற்போது, 14 மில்லியன் கனஅடி நீர் சுத்திகரிப்பு செய்வதற்கு மாற்றாக புதியதாக, 26 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் பழைய ஆறு மின்கம்பங்களுக்கு பதிலாக, 22 கே.வி., மின் பெட்டகம் அமைக்கப்பட உள்ளது.
பழைய, 75 எச்.பி., மின் மோட்டாருக்கு பதிலாக, 100 எச்.பி., மின்மோட்டார் அமைக்கப்படும். அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின் மோட்டார் கட்டடத்துக்கு பதிலாக புதிய பம்ப் அறை கட்டப்படும்.
பழுதடைந்த நிலையில் உள்ள, 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தரைமட்ட தொட்டிக்கு பதிலாக, 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டப்படும்.
தலைமை நீரேற்று நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. மார்க்கெட் ரோடு புதிய நீருந்து நிலையத்தில் உள்ள ஆறு கம்பங்களுக்கு பதிலாக, 22 கே.வி., மின் பெட்டகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
பழைய சிமென்ட் குடிநீர் குழாய்களுக்கு பதிலாக, புதிய குழாய் மார்க்கெட் ரோடு முதல் மகாலிங்கபுரம் வரை, 1.5 கி.மீ.,க்கு பதிக்கும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, கூறினர்.

