sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிதாக காயர் தொழிற்சாலை துவங்குவோருக்கு நாங்க இருக்கோம்! மத்திய கயிறு வாரிய மண்டல அலுவலகம் அழைப்பு

/

புதிதாக காயர் தொழிற்சாலை துவங்குவோருக்கு நாங்க இருக்கோம்! மத்திய கயிறு வாரிய மண்டல அலுவலகம் அழைப்பு

புதிதாக காயர் தொழிற்சாலை துவங்குவோருக்கு நாங்க இருக்கோம்! மத்திய கயிறு வாரிய மண்டல அலுவலகம் அழைப்பு

புதிதாக காயர் தொழிற்சாலை துவங்குவோருக்கு நாங்க இருக்கோம்! மத்திய கயிறு வாரிய மண்டல அலுவலகம் அழைப்பு


ADDED : ஆக 15, 2024 11:45 PM

Google News

ADDED : ஆக 15, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : 'தமிழகத்தில் கயிறு வாரிய மண்டல அலுவலகம் துவங்கப்பட்ட பின் தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயிற்சி தேவைப்படுவோர், தொழில் துவங்க விருப்பம் உள்ளோர்கயிறு வாரியத்தைஅணுகலாம்,' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த, 1997ல் கயிறு வாரிய மண்டல அலுவலகம் துவங்கப்பட்டது. இதற்கு முன், பெங்களூரு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. மண்டல அலுவலக கட்டுப்பாட்டில், தமிழகம், புதுச்சேரி, அந்தமான், நிகோபார் உள்ளிட்டவை உள்ளன.

தமிழகத்தில் மண்டல அலுவலகம் வந்த பின், நிதி திட்டங்கள், மானியம், ஊக்கத்தொகை வழங்கியதால், தென்னை நார் தொழிற்சாலைகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது, 5,000 தொழிற்சாலைகள் உள்ளன.

தென்னை நார் தொழில்துவங்குவோரை ஊக்கப்படுத்த பலத்திட்டங்கள் கயிறு வாரியம் செயல்படுத்துகிறது. அதில், தென்னை நார் உற்பத்தியாளர்கள், இயந்திரம் வாங்க 25 சதவீதம் மானியம், 'ரிமோட்' திட்டத்தில், 40 சதவீதம் மானியம் (நவீன மயமாக்கப்பட்ட தொழிற்சாலை துவங்க) வழங்கப்படுகிறது.

காயர் உத்யமி யோஜானா திட்டத்தில், 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஸ்ப்ரூட்டி திட்டத்தில் தமிழகத்தில், 14 கூட்டுக்குழுமங்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில், ஏழு குழுமங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

சுய வேலைவாய்ப்பு


பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கயிறு வாரியத்தின் வாயிலாக மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அதிகபட்ச திட்ட செலவு, 50 லட்சம் ரூபாயாகும். உற்பத்தி மற்றும் வணிக சேவைத்துறைகளில், 20 லட்சம் ரூபாய்க்கும் விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் துவங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம், 25 சதவீதமாகவும், நகர்ப்புறத்தில் தொழில் துவங்கினால் அதிகபட்சம், 15 சதவீதமும் மானியமாக பெறலாம்.

சிறப்பு பிரிவினர் (ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், பெண்கள்) கிராமப்புறத்தில் தொழில் துவங்கினால், திட்ட மதிப்பில் அதிகபட்சம், 35 சதவீதமும்; நகர்ப்புறத்தில்25 சதவீதத்தை மானியமாக பெறலாம்.

பயிற்சிகள்


கடந்த, 2023 - 24ம் ஆண்டு, மகிளா காயர் யோஜானா என்ற பெயரில், பெண்களுக்கு எட்டு பயிற்சிகளும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு, 11 பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. பயிற்சி காலம், இரண்டு மாதங்களாகும்; ஊக்கத்தொகை, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கடந்த, 2023 - 24ம் ஆண்டில், ஐந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஒரு பயிற்சி, மூன்று தொழில்முனைவோர் கூட்டங்கள், இரண்டு கருத்தரங்கங்கள், கயிறு வாரிய பொருட்கள் மேம்பாட்டுக்காக ஒரு சுற்றுலா, மனித வள மேம்பாட்டு திட்டத்தில், 2 கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

கயிறு வாரிய மண்டல அலுவர் சாபு கூறியதாவது:

கயிறு வாரியம் வாயிலாக, பயிற்சிகள் தஞ்சாவூரில் உள்ள பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகள் துவங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் கயிறு வாரியம் வாயிலாக வழங்கப்படுகிறது.

அதில், 'ரிமோட்' திட்டத்தில், 780 யூனிட்கள் துவங்கப்பட்டுள்ளன.'டெவலப்மென்ட் புரொடெக் ஷன் இன்பராஸ்டெரச்சர்' திட்டத்தில், 100 புதிய யூனிட்க்கு, 1.45 கோடி வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது.

காயர் உதயமி யோஜனா திட்டத்தில், 408 புதிய யூனிட்ஸ்க்கு மானியமாக, 16 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டம் 120 யூனிட்டில், 861 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ப்ரூட்டி கூட்டுக்குழுமங்கள் துவங்குவதற்கான மானியமும் வழங்கப்பட்டுள்ளன.

கயிறு வாரிய மண்டல அலுவலகம் வாயிலாக வழங்கப்படும் திட்டங்களின் மானியம் உள்ளிட்டவை தமிழகத்தில் அதிகளவு வழங்கப்பட்டதால், நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பயிற்சி தேவைப்படுவோர், புதியதாக நிறுவனம் துவங்குதல், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான ஆலோசனைகள் பெற, கயிறு வாரிய அலுவலகத்தை அணுகலாம். இதற்கான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பரிசோதனை மையமும் உள்ளது!

கயிறு வாரிய மண்டல அலுவலகத்தில், பரிசோதனை மையம் உள்ளது. இங்கு, 'பித்' பரிசோதனை செய்து, ஏற்றுமதிக்கு உகந்ததா என ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. பித் வழங்கியதும், இரண்டு நாளில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது.இதுவரை, 200 சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், 'பித்' பிளஸ் தயாரிப்பு, விற்பனை, கண்காட்சி உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படுகிறது.கயிறு வாரியத்துக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம், திப்பம்பட்டியில் உள்ளது. இங்கு தற்போது, சுற்றுச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் கட்டுமானப்பணிகள் முடிந்து, அங்கு அனைத்து வசதிகளுடன் புதிய அலுவலகம் துவங்கப்பட உள்ளதாக, கயிறு வாரிய மண்டல அலுவலர் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us