/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வயதை மறந்தோம்... ஆடி மகிழ்ந்தோம்! பங்கேற்ற மகளிர் ஆனந்த பேட்டி
/
வயதை மறந்தோம்... ஆடி மகிழ்ந்தோம்! பங்கேற்ற மகளிர் ஆனந்த பேட்டி
வயதை மறந்தோம்... ஆடி மகிழ்ந்தோம்! பங்கேற்ற மகளிர் ஆனந்த பேட்டி
வயதை மறந்தோம்... ஆடி மகிழ்ந்தோம்! பங்கேற்ற மகளிர் ஆனந்த பேட்டி
ADDED : மார் 17, 2025 06:11 AM

தினமலருடன்தான் விடியல்
'தினமலர்' வெறும் செய்தித்தாள் இல்லை, எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். இந்த நிகழ்ச்சி, எங்கள் குடும்ப உறுப்பினர் நிகழ்வில் பங்கேற்றது போல மகிழ்ச்சியாக இருக்கிறது.
- ஜீவரத்தினம், ஹட்கோ காலனி.
தகவல் பொக்கிஷம்
மகளிர் மட்டும் விழாவில் வயதை மறந்து களித்தேன். எனக்கு நிறைய புதிய நண்பர்களும் கிடைத்தனர்.
- அலமேலு, சிங்காநல்லுார்.
ஆண்டுதோறும் நடத்துங்கள்
சமூக சேவையாற்றும் மங்கையர்களை கவுரவித்தது பாராட்டுதலுக்குரியது. விருதாளர்கள் பேச்சு, சாதிக்க எந்த வலிமையான பின்னணியும் தேவையில்லை என்பதை உணர்த்தியது. மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது.
- சுமதி, வடவள்ளி.
உற்சாகமாய் கொண்டாடினோம்
கே.ஐ.டி., கல்லுாரியில் பேராசிரியராக உள்ளேன். கல்வி மற்றும் அறிவை வளர்க்க 'தினமலர்' நாளிதழையே, மாணவர்களை படிக்க சொல்லுவேன். வீடு, வேலை என தினசரி ஓட்டத்தை மறந்து, ஒரு நாளை உற்சாகமாக கழிக்க வேண்டும் என வந்தேன். நினைத்தை விடவும் மிகவும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தேன்.
-பிரியா, ஒண்டிப்புதுார்.
பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லை
டாக்டர்கள் கலந்துரையாடல் என மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மறுபுறம், ஆடல், போட்டிகள், பொழுதுபோக்கிற்கும் பஞ்சமில்லை. சின்ன வயதை மறந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டி.ஜே., இசைக்கு ஆடியது, எப்போதும் வாழ்வில் மறக்காத தருணமாக இருக்கும்.
- ரக் ஷா, நல்லாம்பாளையம்.