sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வளர்ச்சிக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வேண்டும்: தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்

/

வளர்ச்சிக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வேண்டும்: தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்

வளர்ச்சிக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வேண்டும்: தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்

வளர்ச்சிக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வேண்டும்: தொழில் வர்த்தக சபை வலியுறுத்தல்


ADDED : ஜூலை 22, 2025 10:49 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தொழில் வர்த்தக சபை கோவை கிளையின், 91வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், தலைவர் ராஜேஷ் லுந்த் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கோவை விமான நிலையத்தில், தற்காலிக சர்வதேச வருகை முனையம் உடனடியாக கட்டப்பட வேண்டும். விரிவாக்கப் பணி திட்டமிடப்பட்ட காலத்தில் முடிக்கப்பட வேண்டும்.

புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான, இருதரப்பு (பாசா) ஒப்பந்த அடிப்படையில், கோவை விமான நிலையமும் பட்டியலிடப்பட வேண்டும்.

ரயில் சேவை கோவை ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டம், அருகிலுள்ள நிலங்களை கையகப்படுத்தி, கூடுதலான இடப்பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும். பிளாட்பார்ம்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கோச்சிங் டிப்போ, பிட் லைன்களை பீளமேட்டுக்கு மாற்ற வேண்டும். வடகோவையில் கூடுதல் பிளாட்பார்ம்கள், ரயில்கள் புறப்பட்டுச் செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பீளமேட்டில், 6 பிட் லைன்கள், பராமரிப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். பன்னோக்கு போக்குவரத்து முனைய பூங்கா உருவாக்கத்தில், ரயில்வே துறையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் டிட்கோவுடன் இணைந்து, செயல்பட வேண்டும். ஜோலார்பேட்டை - கோவை இடையே, நான்கு வழி ரயில் பாதை உருவாக்க வேண்டும். சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில், 16 கோச்சுகள் இணைக்கப்பட வேண்டும்.

மங்களூரு - திருவனந்தபுரம் இடையே புதிய ரயில்கள், ஹைதராபாத், பெங்களூரு, விஜயவாடா இடையே இரவு நேர ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ராமேஸ்வரம், செங்கோட்டை, மதுரை, திண்டுக்கல் ரயில்கள் மீண்டும் துவக்கப்பட வேண்டும். வாராந்திர ரயில் சேவைகள், வாரத்துக்கு மூன்று நாளாக அதிகரிக்கப்பட வேண்டும்.

கோவை - பொள்ளாச்சி ரயில், மதுரை வரை நீட்டிக்கப்பட வேண்டும். மெட்ரோ ரயில் பணி விரைவுபடுத்த வேண்டும்.

சாலைப் போக்குவரத்து கிழக்கு புறவழிச்சாலை, கரூர் விரைவுச் சாலை, நீலம்பூர் மதுக்கரை இடையேயான சாலை விரிவாக்கம், செங்கப்பள்ளி சேலம் இடையிலான சாலை ஆறுவழிச்சாலையாக்குதல், பண்ணாரி சாலைக்கான நிலம் கையகப்படுத்துதல், இதர கையகப்படுத்தும் பணிகள், மேம்பாலங்கள் கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

ஜி.எஸ்டி., தீர்ப்பாயம் அமைக்கப்படும்போது, கோவை பகுதிக்கு தனி அமர்வு உருவாக்க வேண்டும். வேளாண் துறையில் உற்பத்தித் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். குளிர்பதன கிடங்குகள் போன்ற உட்கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும்.

மின்கட்டணம் தொழில்துறைக்கான மின்கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட வேண்டும். ஐ.டி., துறை மேம்பாட்டுக்காக, பிராட் பேண்ட் கட்டமைப்பு வசதிகள், ஊரகப் பகுதிகளில் உருவாக்க வேண்டும்.

சிறுவாணி அணையைத் தூர்வார வேண்டும். பெருநகர கோவை மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத் தலைவர்கள் துரைராஜ், நடராஜன், அண்ணாமலை, செயலாளர்கள் பிரதீப், கார்த்திக், பொருளாளர் கைலாஷ் குமார் உட்பட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us