/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாட்டின் பாதுகாப்புக்காக மோடி நமக்கு தேவை!: அண்ணாமலை பேச்சு
/
நாட்டின் பாதுகாப்புக்காக மோடி நமக்கு தேவை!: அண்ணாமலை பேச்சு
நாட்டின் பாதுகாப்புக்காக மோடி நமக்கு தேவை!: அண்ணாமலை பேச்சு
நாட்டின் பாதுகாப்புக்காக மோடி நமக்கு தேவை!: அண்ணாமலை பேச்சு
ADDED : பிப் 15, 2024 06:57 AM

கோவை : ''எதற்காக பிரதமர் மோடி தேவையோ இல்லையோ, நம் நாட்டின் பாதுகாப்பிற்காக அவர் தேவை. அவரது தலைமையிலான பா.ஜ., அரசு, மீண்டும் நம் நாட்டில் மலர வேண்டும்,'' என்று கோவையில் பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவையில், 1998ல் நடந்ததொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்கு, 26ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, நேற்று ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது.
இதில், பா.ஜ.,மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கோவை, 1998 பிப்.,14க் குப்பின் ஆபத்திலிருந்து தப்பவில்லை. கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு, 2022 அக்.,23ல் வெடிபொருட்களுடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. அதையும் வெறும் சிலிண்டர் வெடிப்பு என்றே, தமிழக அரசு கூறியது. ஆனால் அதில் தற்கொலைப்படையாக பலியான, ஜமேஷாமுபின் வீட்டில் என்.ஐ.ஏ.,மேற்கொண்ட சோதனையில், வெடிபொருள் உள்ளிட்ட, 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து தமிழகத்தில், 12 மாவட்டங்களில், 86 இடங்களில் என்.ஐ.ஏ.,சோதனை மேற்கொண்டது; 15 பேர் கைதாயினர். இவர்களுக்கு, சத்தியமங்கலம் காட்டில் பயிற்சி அளித்துள்ளனர். ஆறு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எவ்வளவு ஆண்டுகளானாலும், தி.மு.க.,இந்த உண்மையை மறைத்தே பேசும்.
கோவை இன்னும் தப்பவில்லை
கோவை இனியும் ஆபத்திலிருந்து தப்பவில்லை. இந்த சூழலில், கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகள், 158 பேரில் சிலரை விடுவிக்க வேண்டும் என்று, ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் இரண்டு சதவீத சிறுபான்மை ஓட்டுக்களுக்காக வலியுறுத்துகின்றன. உச்சநீதிமன்றம், ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
உலக நாடுகள் மத்தியில், வல்லமை கொண்ட நாடுகளாக பெரும்பாலான நாடுகள் உருவாகும். அந்த வரிசையில் நம் நாடும் இடம்பெறும். அதற்கு மோடி தலைமையிலான நம் நாடு தயாராகி வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் நம் நாட்டில் குண்டு வெடிப்புகள் ஏதும் இல்லாத நிலையை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி. அதே நிலை நீடிக்க வேண்டும். வன்முறைகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். பிரதமர் மோடி எதற்கு தேவையோ இல்லையோ, நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி தேவை.
அதற்காக அவரது தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும் நம்நாட்டில் மலர வேண்டும். அதற்கு லோக்சபா தேர்தலில் வாக்களித்து, பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
இந்நிகழ்ச்சியில், வி.எச்.பி. மாநில செயலாளர் லட்சுமிநாராயணன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன், மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாநில பொருளாளர்சேகர், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் ராஜா, இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், பா.ஜ.,மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

