/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதுப்புது பாடங்களை தேர்வு செய்யணும்! வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஆலோசனை

ADDED : செப் 29, 2025 10:37 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், பரிசளிப்பு விழா, உயர்கல்வி, தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கல், உயர்கல்வி, தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.
கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். தொழில் வழிகாட்டி ஆலோசகர் ஜெயப் பிரகாஷ் காந்தி பேசுகையில், ''மாணவர்கள் தங்களின் திறமை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் பாடப்பிரிவுகளை தேர்வு செய் ய வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்கள் புதுப்புது பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.
புதிய கல்வி கொள்ளை வலியுறுத்தும் பல்வகை கற்றல் வாயிலாக, அனைத்து துறை சார் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளை கற்பதன் வாயிலாக எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கேட்கும் திறன், கவனித்தல் திறன்களை வளர்த்து அறிவை மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.
கோவை, பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, திருப்பூர், தாராபுரம், பழநி, திண்டுக்கல் ஆகிய கல்வி மாவட்டங்களில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90க்கும் மேற்பட்ட பள்ளிகளில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 300 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், அருட்செல்வர் 'யூத் ஐகான்' விருது வழங்கப்பட்டது.
மாநில அளவில் முதலிடம் பெற்ற கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர் கார்த்திக்குக்கு விருது வழங்கப்பட்டது. அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் நன்றி கூறினார்.