/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குப்பை தேக்கத்தை கட்டுப்படுத்தணும்'
/
'குப்பை தேக்கத்தை கட்டுப்படுத்தணும்'
ADDED : ஆக 04, 2025 08:18 PM
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில், குப்பை மேலாண்மை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடந்த கூட்டத்தில், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது, மேயர் ரங்கநாயகி பேசுகையில்,''வார்டுகளில் நடக்கும் குப்பை சேகரிப்பு பணிகளை அதிகாரிகள் கண்காணித்து, குப்பை தேக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். துாய்மை பணியாளர்கள் வீடுதோறும் குப்பையை தரம் பிரித்து, சேகரிப்பது அவசியம்.
குப்பை அள்ளும் வாகனங்களில், ஏதேனும் கோளாறு இருப்பின் உடனடியாக சரி செய்து பணிக்கு அனுப்ப வேண்டும். ரோடுகளின் நடுவே, சென்டர் மீடியன் ஓரம் இருக்கும் மண்ணை அகற்ற வேண்டும். துாய்மை பணியாளர்கள் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் பணி செய்ய அறிவுறுத்த வேண்டும்,'' என்றார்.