நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறை நகரில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லும் ரோட்டில் வேகத்தடை இல்லாததால், அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வரும் வால்பாறையில், முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேவையற்ற இடங்களில் வேகத்தடை அமைத்துள்ளனர்.
வால்பாறையின் மையப்பகுதியான சுப்ரமணிய சுவாமி கோவில் ரோட்டில் விபத்துகளை தவிர்க்க உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்,' என்றனர்.