/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலுக்கு முன் ரோடு போட்டால் தான் பிழைத்தோம் மேயரிடம் குறைகளை கொட்டித் தீர்த்த கவுன்சிலர்கள்
/
தேர்தலுக்கு முன் ரோடு போட்டால் தான் பிழைத்தோம் மேயரிடம் குறைகளை கொட்டித் தீர்த்த கவுன்சிலர்கள்
தேர்தலுக்கு முன் ரோடு போட்டால் தான் பிழைத்தோம் மேயரிடம் குறைகளை கொட்டித் தீர்த்த கவுன்சிலர்கள்
தேர்தலுக்கு முன் ரோடு போட்டால் தான் பிழைத்தோம் மேயரிடம் குறைகளை கொட்டித் தீர்த்த கவுன்சிலர்கள்
ADDED : டிச 19, 2025 05:13 AM

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில், மேயர் ரங்கநாயகி தலைமையில் கவுன்சிலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. துணை கமிஷனர் சுல்தானா, மண்டல தலைவர் கதிர்வேல், தலைமை பொறியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
அதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
சரண்யா (வார்டு 30): தேவையான இடங்கள் கான்கிரீட் ரோடு, தார் ரோடு போட வேண்டும். குப்பையை ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர். கொட்டுவதற்கு ஓரிடம் ஒதுக்கித் தர வேண்டும். அமைச்சர், எம்.பி. வரவழைத்து வார்டுக்குள் ஏராளமான வளர்ச்சி பணிகள் செய்திருக்கிறோம்; கல்வெட்டு வைக்க வேண்டாமா. மூன்று மாதமாகியும் மழை நீர் வடிகால் கட்டவில்லை. மழை நீர் வடிகால் வரை சுற்றுச்சுவர் கட்டுகின்றனர்.
சிரவை சிவா (வா. 11): பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய ரோடு சீரமைக்கப்படாமல் இருக்கிறது. லோக்சபா தேர்தல் சமயத்தில் வெட்மிக்ஸ் கொட்டப்பட்டது; இன்று வரை ரோடு போடவில்லை. லாரி இறங்குவதாக பேப்பரில் செய்தி வருகிறது; யாருக்கு கெட்ட பெயர். எனது வார்டில் 50 சதவீத சாலைகள் மோசமாக உள்ளன. 10 ரோடுகள் படுமோசமாக இருக்கின்றன. குறுக்கு வீதிகளில் ரோட்டை ஆக்கிரமித்து கார்களை நிறுத்துகின்றனர்.
புஷ்பமணி (வா.2): டி.என்.பி., காலனி, சேரன் நகர், வட்டமலைபாளையம் பகுதியில் புதர்மண்டி கிடக்கும் ஓடைகளை துார்வார வேண்டும். 'ரிசர்வ் சைட்'டுகள், பூங்காக்களை சுத்தம் செய்ய வேண்டும். வாய்க்கால் துார்வார 10 பேர் ஒதுக்க வேண்டும். துாய்மை பணியில் கவனம் செலுத்தாவிட்டால் சங்கடம் ஏற்பட்டு விடும்.
கவிதா (வா. 3): பூங்கா கட்டும் பணி துவங்கி இரண்டு வருஷமாகி விட்டது; இன்னும் முடியவில்லை. அஞ்சுகம் நகரில் கால்வாய் கட்டும் பணி மெயின் வீதியில் மட்டும் நடந்தது; குறுக்கு வீதியில் செய்யவில்லை; நிதி முடிந்து விட்டது என்கின்றனர். ரோடு போட்டு ஆறு மாதமே ஆகிறது; மோசமாகி விட்டது. ஒப்பந்ததாரரை அழைத்தால் வர மறுக்கிறார்.
ராமமூர்த்தி (வா. 12): துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கி.மீ.க்கு ஒருவர் வீதம் சாக்கடை துார்வார நியமிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் வராவிட்டால் மாநகராட்சி பணியாளரை பதிலியாக அனுப்புகிறோம். சம்பளம் மாநகராட்சி வழங்குகிறது; வேலையை தனியார் நிறுவனம் செய்கின்றனர். எங்கோ தவறு நடக்கிறது; சரி செய்யுங்கள்.
கற்பகம் (வா.1): ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு வராவிட்டால், நிரந்தர தொழிலாளர்களை பதிலியாக அனுப்பக் கூடாது. தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டியது தனியார் நிறுவனத்தினரின் பொறுப்பு. சாக்கடை துார்வாருதல் உள்ளிட்ட இதர பணிகளுக்கு நிரந்தர பணியாளர்களை ஒதுக்க வேண்டும்.
கதிர்வேலுசாமி (வா. 4): இரு ஆண்டுகளாக உயர்கோபுர விளக்கு எரிவதில்லை. சமீபத்தில் போடப்பட்ட தெருவிளக்குகளில் ஆறு எரிவதில்லை. சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு கோடி ரூபாய் செலவழித்து புதிதாக போடப்பட்ட ரோட்டை தோண்டி சின்னாபின்னமாக்கி விட்டனர். சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்தி விட்டோம்; ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்துகிறோம். மீண்டும் வீடு வீடாகச் சென்று அளவீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். அதற்கு அரசு உத்தரவு இருக்கிறதா?
சித்ரா (வா. 26): ஸ்ரீராம் நகரில் 35 லட்சத்துக்கு மழை நீர் வடிகால் கட்டி, பயனின்றி உள்ளது. இன்னும் 400 மீட்டர் துாரத்துக்கு கட்டித் தர வேண்டும். ஹட்கோ காலனியில் சூயஸ் பணி நிலுவையில் இருக்கிறது. வி.கே.ரோட்டில் ஏகப்பட்ட இடங்களில் குடிநீர் கசிவு ஏற்பட்டு வருகிறது; உடனடியாக குழாயை சீரமைத்து தர வேண்டும். தவமணி (வா. 25): காந்தி மாநகரில் கான்கிரீட் ரோடு, தார் ரோடு போட்டுத்தர வேண்டும். போலீஸ் குவார்ட்டர்ஸ் பகுதியில் 750 மீட்டர் துாரத்துக்கு சூயஸ் குழாய் பதிக்க வேண்டும். வ.உ.சி., நகரில் சுகாதார அலுவலகம் வேண்டாம்; சிறிய அளவில் கல்யாண மண்டபம் கட்டிக் கொடுத்தால், மக்கள் சின்ன சின்ன நிகழ்ச்சிகள் நடத்த பயனுள்ளதாக இருக்கும். ரோடு போட்டால்தான் தேர்தலுக்கு வார்டுக்குள் நாம் செல்ல முடியும்.
கதிர்வேல்: வீடு வீடாக குப்பை சேகரிப்பதால், பொது இடத்தில் கொட்டுவது தடுக்கப்பட்டது. மக்கள் புரியாமல் வீசிச் செல்கின்றனர். அதை தடுக்கவே கேமரா பொருத்தப்படுகிறது.குப்பை அள்ளும் தனியார் நிறுவனத்துக்கு டன் கணக்கிற்கே தொகை வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப வழங்குவதில்லை. தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது.
மேயர் ரங்கநாயகி: வார்டுகளில் செய்த முக்கியமான பணிகளுக்கு கல்வெட்டு வைக்க வேண்டும். ரோடு விரைவில் போடப்படும். ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. சூயஸ் நிறுவனத்தினர் 'அசால்ட்டாக' இருக்கக் கூடாது. மாநகராட்சியை கேட்காமல் எந்த இடத்திலும் ரோட்டை தோண்டக் கூடாது.
இவ்வாறு, கூட்டத்தில் பேசப்பட்டது.

