/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமண ஆல்பம் தர மறுப்பு; இழப்பீடு வழங்க உத்தரவு
/
திருமண ஆல்பம் தர மறுப்பு; இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : டிச 12, 2024 11:39 PM
கோவை; திருமண நிகழ்ச்சி ஆல்பம் தர மறுத்ததால், பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவைபுதூர், ஜாமியா நகர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், 2021ல் நடந்த இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வீடியோ மற்றும் போட்டோ எடுக்க, சாய்பாபா காலனியிலுள்ள கிளம்ஸ் ஸ்டூடியோவில் ஆர்டர் கொடுத்தார்.
இதற்காக, 55,000 ரூபாய் செலுத்தினார். ஆனால், திருமணம் முடிந்து பல மாதங்களாகியும் வீடியோ மற்றும் போட்டோ ஆல்பத்தை வழங்கவில்லை. மேலும், 25,000 ரூபாய் கொடுத்தால் ஆல்பம் தருவதாக தெரிவித்தனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த விஜயலட்சுமி, திருமண நிகழ்ச்சி ஆல்பம் மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரருக்கு திருமண ஆல்பத்தை உடனடியாக வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

