/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பூமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜன 28, 2025 11:08 PM

வால்பாறை ; நடுமலை எஸ்டேட் கோவில் திருவிழாவில், அம்மன் திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில் உள்ள பூமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோவிலின், 65ம் ஆண்டு திருவிழா, கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து நடந்த விழாவில், நாள் தோறும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, 10:00 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 11:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், பக்தர்கள் பங்கேற்று, அம்மன் திருக்கல்யாணம் கண்டு, சுவாமியை வழிபட்டனர். வரும், 4ம் தேதி இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.