/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மினியேச்சர் ஷீட்டில்' திருமண அலங்காரம்
/
'மினியேச்சர் ஷீட்டில்' திருமண அலங்காரம்
ADDED : அக் 29, 2024 12:06 AM

இந்தியாவில் திருமணம் சம்பந்தப்பட்ட உடை, உணவு, சடங்குகள், பல்வேறு கலாசாரங்கள் அடிப்படையில் வேறுபடுகின்றன. மணமகள் உடையில், சாதாரணமாக சிவப்பு நிறம் முக்கிய இடம் பிடிக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, புடவை என்பது மணப்பெண்ணின் திருமண உடையில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் திருமணங்களில், மணப்பெண்ணின் உடை அலங்காரம் குறித்த அஞ்சல் தலைகளின் தொகுப்பு, 2023ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதில், தமிழகம், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம், மணிப்பூர், மஹாராஷ்டிரா மற்றும் கேரளம் ஆகிய மாநில மணப்பெண்கள் அணியும் உடைகள், அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டது. ஒரு காகிதத்தில், பல்வேறு அஞ்சல் தலைகள் அச்சடிக்கப்படுவது, 'மினியேச்சர் ஷீட்' என்று அழைக்கப்படும்.
(நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. இதையொட்டி, தினம் ஒரு தபால் தலையின் வரலாறை காண்போம்).