/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழநிக்கு யாத்திரை சென்ற எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பு
/
பழநிக்கு யாத்திரை சென்ற எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பு
பழநிக்கு யாத்திரை சென்ற எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பு
பழநிக்கு யாத்திரை சென்ற எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பு
ADDED : பிப் 07, 2025 09:52 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி வழியாக, பழநிக்கு யாத்திரை சென்ற பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனுக்கு கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர்.
கோவையில் இருந்து பழநிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பா.ஜ., மகளிர் பிரிவு தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் யாத்திரை செல்கிறார்.
நேற்று, கிணத்துக்கடவு, கோவில்பாளையம் பகுதியில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர்.அதே போன்று, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே, பல்லடம் ரோடு ஐந்து ரோடு சந்திப்பு பகுதியில் கட்சியினர், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மற்றும் அவருடன் வந்த எம்.எல்.ஏ., சரஸ்வதிக்கும் வரவேற்பு கொடுத்தனர்.
பா.ஜ., மாவட்ட தலைவர் சந்திரசேகர், நகர தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.
* உடுமலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று மதியம், வானதி சீனிவாசனுக்கு பா.ஜ., கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பூரண கும்ப மரியாதையுடன், வேல் வழங்கினர். தொடர்ந்து, பழநி ரோட்டிலுள்ள தனியார் மண்டபத்தில், கட்சியினரை சந்தித்தார். கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது.