UPDATED : அக் 19, 2026 07:03 PM
ADDED : அக் 19, 2026 07:00 PM

அன்னூர்: த.வெ.க., அன்னூர் கிழக்கு ஒன்றியம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்குதல் மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கரியாம்பாளையத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி, 950 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
அவர் பேசுகையில், கடந்த ஐந்து மாதங்களில் பல சாதனைகளைச் செய்ததால் இடைத்தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்றுள்ளது. அவிநாசியில் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், கடந்த மூன்று மாதங்களாக தினமும் 100 பேருக்கு இலவச உணவு வழங்கி வருகிறோம். வரும் 25ம் தேதி முதல் அன்னூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க உள்ளோம், என்றார்.
அரிசி, ஹாட் பாக்ஸ், கல்வி உதவித் தொகை, சேலை ஆகியவை வழங்கப்பட்டன. கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகரச் செயலாளர் கிருஷ்ண தாஸ், ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித் குமார், விஜய் உள்பட பலர் பங்கேற்றனர்.
