/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை வீரர்கள் 'சபாஷ்'
/
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை வீரர்கள் 'சபாஷ்'
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை வீரர்கள் 'சபாஷ்'
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை வீரர்கள் 'சபாஷ்'
ADDED : மே 19, 2025 11:52 PM

கோவை; மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை வீரர்கள் அரையிறுதி, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, வேலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட, 28 மாவட்டங்களை சேர்ந்த, 1,200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கோவையில் இருந்து, 13, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 40 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்திவருகின்றனர். 13 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் வீரர் சர்வேஷ் முதல் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தருணை, 3-0 என்ற செட் கணக்கில் வென்றார்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் ஜெபின் அந்தோணியை, 3-1 என்ற செட் கணக்கிலும், சென்னை லோகித் சரணை, 3-0 என்ற செட் கணக்கிலும், மதுரை பிரணவ் பாலாஜியை, 3-1 என்ற செட் கணக்கிலும் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல், 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காவியா, ஸ்ரீ சச்சின், யோகிதா, ஜஷ்விகா ஆகியோர் அடங்கிய பெண்கள் அணியினர் கடலுார் அணியை, 3-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நரேஷ், சாய் நிதிஷ், விஷ்ணு, நிதிஷ் ஆகியோர் அடங்கிய ஆண்கள் அணியினர் ஈரோடு அணியை, 3-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.