/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நலம்... நலமறிய ஆவல்' கடிதம் எழுதிய மாணவியர்
/
'நலம்... நலமறிய ஆவல்' கடிதம் எழுதிய மாணவியர்
ADDED : அக் 14, 2025 01:15 AM
கோவை:உலக தபால் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியர் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க, அவர்களின் பெற்றோர், நண்பர்கள், தோழியருக்குஎழுதி போஸ்ட் செய்தனர்.
1874ம் ஆண்டு, உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் உருவாக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில், தபால் துறையின் பங்களிப்பு, சமூகத்தில் எவ்வாறு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது குறித்த விழிப்புணர்வை, மக்களிடத்தில் ஏற்படுத்துவதாக, உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு, உள்ளூர் சேவை உலகளாவிய இணைப்பு' என்பதை கருப்பொருளாக வைத்து, உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆர்.எம்.எஸ்., கோவை கோட்டத்தின் ஒருங்கிணைந்த மையங்கள் அமைந்துள்ள கவுண்டம்பாளையத்தில், இத்தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்று, தபால் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டு, பெற்றோர், நண்பர்கள், தோழியருக்குகடிதம் எழுதி, போஸ்ட் செய்தனர்.
கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது என, கோவை ஆர்.எம்.எஸ்., கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு தெரிவித்தார்.