sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொள்ளாச்சி மாவட்டம் என்னாச்சு; வால்பாறை மக்களும் அழுத்தம்!

/

பொள்ளாச்சி மாவட்டம் என்னாச்சு; வால்பாறை மக்களும் அழுத்தம்!

பொள்ளாச்சி மாவட்டம் என்னாச்சு; வால்பாறை மக்களும் அழுத்தம்!

பொள்ளாச்சி மாவட்டம் என்னாச்சு; வால்பாறை மக்களும் அழுத்தம்!


ADDED : மார் 17, 2025 09:29 PM

Google News

ADDED : மார் 17, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, மாவட்டம் அறிவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், 'பொள்ளாச்சி மாவட்டம் வேண்டும்' என, பல்வேறு அமைப்புக்களின் சார்பில் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர்.

வால்பாறை மக்களின் பேட்டி வருமாறு:

திலகா, டெய்லர்: வால்பாறையில் தேயிலை தொழில் மட்டுமே உள்ளது. இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக, 100 கி.மீ., தொலைவில் உள்ள கோவைக்கு செல்ல வேண்டியுள்ளது. கலெக்டரை பார்க்க நீண்ட துாரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வால்பாறை மக்கள் பயன்பெறும் வகையில், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் ஏற்படுத்த வேண்டும்.

மகேஸ்வரி, சுயதொழில்: வால்பாறையில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மக்களின் நீண்ட கால பிரச்னைகளை மாவட்ட கலெக்டரிடம் நேரில் தெரிவிக்க பல மணி நேரம் பயணம் செய்து, கோவைக்கு சென்று மனு கொடுக்க வேண்டியுள்ளது. உயர்அதிகாரிகளை சந்திக்கவும் நீண்ட துாரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. மக்களின் தேவையை புரிந்து, பொள்ளாச்சி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும்.

சுரேஷ், முன்னாள் ராணுவ வீரர்: கோவை மாவட்டத்தின் சுற்றுலா தலமான வால்பாறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அப்போது தான், மாவட்ட கலெக்டர் முதல் எஸ்.பி.,வரை அனைத்து துறை அதிகாரிகளை சந்திக்க, வால்பாறை மக்கள் பல மணி நேரம் பயணம் செய்யும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கவும், கலெக்டரை சந்திக்கவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவித்தால், வால்பாறை சிறப்பு பெறும்.

ரவீந்தரன், தே.மு.தி.க., நகர பொறுப்பாளர்: கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக பொள்ளாச்சி அமைந்துள்ளது. அதே போல், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் வால்பாறையில் தான் உள்ளன. சுற்றுலா பயணியரின் மனதை கொள்ளை கொண்ட வால்பாறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு விரைவில் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும், உடுமலை, மடத்துக்குளத்தை இணைந்து பழநி மாவட்டம் அமைப்பதை கைவிட வேண்டும்.

சிவா, தமிழக வணிகர் சம்மேளனம்: வால்பாறை அடுத்துள்ள ேஷக்கல்முடி எஸ்டேட் பகுதியிலிருந்து, 130 கி.மீ., தொலைவில் கோவை உள்ளது. இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரை சந்திக்க, பல மணி நேரம் பஸ்சில் பயணிக்க வேண்டும். மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாவதோடு, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பும் ஏற்படுகிறது. பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவித்து, அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். இதற்கு, முதல்வர் மனசு வைக்கணும்.

சின்னசாமி, நிதி நிறுவன நிர்வாகி: வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தாலுக்காவை உள்ளடக்கி, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது, பத்து ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது. இதனால், தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமான வால்பாறை வளர்ச்சி பெறும். நீர்நிலைகள், இயற்கை வளம் நிறைந்த வால்பாறையை மேம்படுத்த முடியும்.

மணிகண்டன், தனியார் நிறுவன ஊழியர்: பொள்ளாச்சியை மாவட்டமாக்கினால், மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில், வால்பாறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்கள் அதிகாரிகளை சந்திப்பதும், அரசு திட்டங்கள் மக்களை சென்றடைவதும் எளிதாகும். வால்பாறையில், தேயிலை தொழிலுக்கு, மாற்றாக தொழில்வாய்ப்புகள் ஏற்படும். பொள்ளாச்சி மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் நவீனமாகும். மக்களுக்கு மருத்துவசேவைகள் எளிதாக கிடைக்கும். அதனால், மாவட்டமாக்குவதற்கு அரசு மனசு வைக்கணும்.






      Dinamalar
      Follow us