/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க; கல்வித்துறை அறிவிப்பு பின்னணி
/
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க; கல்வித்துறை அறிவிப்பு பின்னணி
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க; கல்வித்துறை அறிவிப்பு பின்னணி
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க; கல்வித்துறை அறிவிப்பு பின்னணி
ADDED : செப் 07, 2025 09:37 PM

கோவை: ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுத உள்ள ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்றிதழ் பெறுவதற்காக, முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டாம்; பள்ளி அளவிலேயே அலுவலக கோப்புகளை பராமரிக்கவும், சர்வீஸ் ரெக்கார்டு மற்றும் பதிவுகளை சரிபார்த்து கொள்ளவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த தகவல், வழக்கமான சுற்றறிக்கையாக அனுப்பப்படாமல், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பகிரப்பட்டுள்ளது.
காரணம், தடையின்மை சான்றிதழ் பெற வேண்டாம் என்ற தகவல் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டால், அரசு பணியில் சேர்ந்த பின் தடையின்மை சான்றிதழ் பெறாமல் உயர்கல்வி முடித்தவர்களுக்கு, ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்.
பொதுவாக, பணியில் சேர்ந்த பிறகு உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 4,500 பேர் தடையின்மை சான்றிதழ் பெறாமல் உயர்கல்வி முடித்துள்ளதால், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகையை அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும் என்பதற்காகவே, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு பணியில் உள்ளவர் உயர் கல்வி படிக்கத் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், அந்தச் சான்றிதழ் பெறாமல் 2017க்கு முன் உயர் கல்வி படித்தவர்களுக்கு, ஊக்கத்தொகை இதுவரை அரசு வழங்கவில்லை. அரியர்ஸ் மட்டும் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை வரும். இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை'என் றார்.