/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிற்காப்பு இல்லத்திலிருந்து வெளியேறுபவர்கள் என்ன செய்கின்றனர்... எங்கே போகின்றனர்? வழிதவறாமல் இருக்க கண்காணிக்க கோரிக்கை

ADDED : ஆக 20, 2025 12:51 AM
கோவை; பிற்காப்பு இல்லங்களில் தங்கி வரும் இளம் பருவத்தினர், வெளியேறிய பிறகு வழி தவறிச் செல்லாமல் இருக்க, அவர்களை கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஆதரவற்றோர், பெற்றோரால் கைவிடப்பட்டோர், அல்லது பெற்றோருடன் வாழ முடியாத, 18 முதல் 21 வயது இளைஞர்கள், பிற்காப்பு இல்லங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இவர்களில் சிலர் கல்லூரியில் கல்வி கற்றும், சிலர் வேலைக்கு சென்றும் வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
18 வயதுக்கு குறைவானோர், குழந்தை காப்பகங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். போக்சோ உள்ளிட்ட இதர வழக்குகள் காரணமாகவும், குழந்தைகள் தற்காலிகமாக இங்கு தங்க வைக்கப்படுகின்றனர்.
கோவையில் அரசு காப்பகங்கள் 2 , அரசு உதவி பெறும் காப்பகங்கள் 5 உட்பட 31 காப்பகங்கள் உள்ளன. குழந்தைகள் நலக்குழு (சி.டபிள்யூ.சி) அனுமதி அளித்த பிறகே, காப்பகங்களில் சேர்க்கப்படுவார்கள்; அதேபோல் வெளியேற்றமும் நடைபெறும். இந்த நடைமுறை, பிற்காப்பு இல்லங்களிலும் பின்பற்றப்படுகிறது.
சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரே, இந்த காப்பகங்களில் தங்கியுள்ளனர். ஆனால், சமூக சூழலால், பிற்காப்பு இல்லங்களை விட்டு வெளியேறுபவர்கள், வழி தவறிச் செல்லும் அபாயம் இருப்பதால், அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காப்பகங்களை விட்டு வெளியேறுபவர்களுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இருந்தால், அவர்களிடம் ஒப்படைப்போம். யாரும் இல்லாதவர்களை ஆதரவற்றோர் இல்லங்களில் தங்க வைக்கிறோம்' என்றார்.
சமூக சூழலால், பிற்காப்பு இல்லங்களை விட்டு வெளியேறுபவர்கள், வழி தவறிச் செல்லும் அபாயம் இருப்பதால், அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன.