தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ என்ன, அறிவியலை வைத்து விளையாடலாமா? 

என்ன, அறிவியலை வைத்து விளையாடலாமா? 

என்ன, அறிவியலை வைத்து விளையாடலாமா? 


UPDATED : செப் 24, 2026 04:47 PM

ADDED : செப் 24, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 04:47 PM ADDED : செப் 24, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டை வைத்தே அவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியுமா? இந்த கேள்விக்கு விடை தருகிறது கோவையில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையம்.

பிரமிக்க வைக்கும் அறிவியல் கருத்துகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை இந்த விளையாட்டுகள். ஒவ்வொன்றும் குழந்தைகளை காந்தம்போல இழுக்கும் வகையில் உள்ளன.

'ஃப்ரோஸன் ஷேடோ'வில் 'ஃப்ளோரசன்ட் லைட்' பயன்படுத்தி நிழலை பிடித்து வைக்க முடிகிறது.

'ஹெட்ரோசென்' என்பது ஒரு பெட்டிக்குள் நம் தலை மட்டும் தெரிவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. பிரதிபலிப்பு முறையை பயன்படுத்தி இதில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

'கலர் ஷேடோ'வில் முதன்மை நிறங்களை ஒன்றோடு ஒன்று கலக்கும்போது, அவை நம்பவே முடியாத புதுப்புது நிறங்களாக பிரதிபலிக்கிறது.

இந்த மையத்தில் 'மினி பிளானட்டோரியம்' உள்ளது. விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்தால் அறிய முடியும்.

3டி திரையரங்கமும் இருக்கிறது. டைனோசர் நம்மை முத்தமிட நெருங்கி வருவது போன்ற திகிலும் காமெடியும் கலந்த காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

நமது எடை எவ்வளவு என்பது நமக்கு தெரிந்திருக்கும். ஆனால், பூமி அல்லாத வேறு கிரகங்களுக்கு போனால், அங்கே நம் எடை எத்தனை கிலோ அல்லது எத்தனை கிராம் ஆக இருக்கும் என்பதை இங்கு குறித்துள்ள இடங்களில் நின்று நாம் அறிந்துகொள்ள முடியும்.

புத்தகங்களில் நாம் படித்த இயற்பியல் சார்ந்த பல 'தியரி்'களை இம்மையத்தில் நாம் 'பிராக்டிக்கல்' முறையில் செய்து பார்க்கும் வசதிகள் இருக்கின்றன.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு புரியாத அல்லது தங்களால் விளக்கி சொல்ல முடியாத இயற்பியல் வினோதங்களையும் அதிசய உண்மைகளையும் இந்த மையத்துக்கு அழைத்து சென்று, குழந்தைகள் விரும்பும் வகையில் தெளிவுபடுத்த முடியும்.

ஒரு விசிட் போய் பாருங்கள். விளையாட்டாக அறிவியலை கற்றுக்கொள்ள முடிகிற இந்த மையம் பெரியவர்களுக்கும் இனிமையான அனுபவமாக அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us