தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆவினில் என்னதான் நடக்கிறது?

 ஆவினில் என்னதான் நடக்கிறது?

 ஆவினில் என்னதான் நடக்கிறது?

1


ADDED : ஜூன் 02, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 11:41 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஆவின் பால் முகவர்களுக்காக ஆவின் நிர்வாகம் புது செயலியை அறிமுகப்படுத்தியது. பால் ஆர்டர் செய்வது, அதற்கான தொகையை செலுத்துவது போன்ற வேலைகளை அந்த ஆப் மூலமாகத்தான் செய்ய வேண்டும் என கூறியது.

'இந்த செயலியில் நிறைய வசதிகள் உள்ளன; மாத கமிஷன் 5ம் தேதிக்கு பதிலாக, முன்கூட்டியே 31ம் தேதியே வங்கி கணக்கிற்கு வந்துவிடும்; சேதமடையும் பாலுக்கு உடனடி தீர்வு உண்டு; கூடுதல் சேவை கட்டணம் கிடையாது' என பல விளக்கங்களை கூறியதால் முகவர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால், முதல் நாளில் இருந்தே புது ஆப் சரியாக இயங்காமல் தங்களை பாடாய் படுத்துகிறது என முகவர்கள் புலம்புகின்றனர். வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட தலைவர் லிங்கம், புதிய செயலி குறித்து செயல்முறை விளக்கம் தரவில்லை. சங்கத்தில் உள்ள சிலரிடம் தனியாக கையெழுத்து வாங்கி, அதை காட்டி, ஆவின் தலைவரான கலெக்டரிடம் ஒப்புதல் பெற்று, நல்ல முறையில் செயல்பட்டு வந்த பழைய செயலியை நீக்கிவிட்டது” என்கிறார்.

”கலெக்டரிடம் புகார் அளித்தோம். ஆனால் ஆவின் நிர்வாகிகள், கலெக்டரிடம் நம்பும்படியான ஏதோ விளக்கத்தை கூறி தப்பி விட்டனர். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நேற்று பெரும்பாலான பூத்களில் பால் இறங்கவில்லை என்றார்.

உடன்பாடு இதனிடையே, பச்சாபாளையம் ஆவின் பால் பண்ணை பிரச்னையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது.

இங்கு தயாராகும் பால் பாக்கெட்டுகள், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு, தினசரி ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்படுகிறது. 33 வழித்தடங்களில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரு வாகன உரிமையாளர் வேணுகோபால் என்பவர், நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, 22ம் தேதி, அவரது ஒப்பந்தத்தை, ஆவின் பொது மேலாளர் சண்முகம் ரத்து செய்தார். அதை கண்டித்து, 33 வாகன உரிமையாளர்களும் பண்ணையில் தர்ணா செய்தனர்.

நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஒப்பந்த விதிமுறைகளை மீறி வாகன உரிமையாளர்கள் செயல்படுவதாக பொது மேளாளர் புகார் சொன்னார். புது ஆவின் செயலியால் ஏற்படும் குழப்பமே தவிர, தங்கள் மீது தவறு இல்லை என வாகன உரிமையாளர்கள் கூறினர். வேணுகோபால் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.

அதை ஏற்று, அவருக்கு மீண்டும் ஒப்பந்தம் அளித்து பொதுமேலாளர் உத்தரவிட்டார். அதோடு, வாகன உரிமையாளர்கள் போராட்டம் முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us