/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் குழந்தைக்கு ஏற்ற சிறந்த பள்ளி எது? 'தினமலர் - பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சியில் அறியலாம்
/
உங்கள் குழந்தைக்கு ஏற்ற சிறந்த பள்ளி எது? 'தினமலர் - பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சியில் அறியலாம்
உங்கள் குழந்தைக்கு ஏற்ற சிறந்த பள்ளி எது? 'தினமலர் - பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சியில் அறியலாம்
உங்கள் குழந்தைக்கு ஏற்ற சிறந்த பள்ளி எது? 'தினமலர் - பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சியில் அறியலாம்
ADDED : ஜன 18, 2024 12:26 AM
'தினமலர்' மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து, பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியை வரும், 20 மற்றும் 21ம் தேதிகளில், கோவையில், அவிநாசி ரோட்டில் உள்ள, சுகுணா கல்யாண மண்டபத்தில் நடத்துகின்றன. உங்கள் குழந்தைக்கான தலைசிறந்த பள்ளியை தேர்வு செய்ய, பெற்றோர் பங்கேற்று பயனடையலாம்.
பெற்றோரின் முக்கிய கடமை, குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் பள்ளியை தேர்வு செய்வதாகும். ஏனெனில், வீட்டில் இருப்பதை விட, பள்ளி சூழலில்தான், குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
'குழந்தைகளின் தனித்திறனை கண்டறிந்து, தேடலை விரிவாக்கி, கற்றலில் ஆர்வத்தை துாண்டும் வளாகமாக, நல்ல பண்புகளை வளர்த்தெடுக்கும் இடமாக, அப்பள்ளி இருக்க வேண்டும்...
அவர்களின் கேள்விகளுக்கு, தொழில்நுட்பங்களின் விரல் பிடித்து, வழிகாட்ட சிறந்த ஆசிரியர்கள் அமைய வேண்டும்... வெறும் கரும்பலகையை கொண்ட சராசரி வகுப்பறைகளாக இல்லாமல், அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஆக இருக்க வேண்டும்... வீட்டிற்கு அருகிலே இருக்க வேண்டும்... சிறந்த விடுதி வசதி கொண்ட பள்ளி வேண்டும்...'
இப்படி உங்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து தரும் பள்ளியை, ஒரே இடத்தில் கண்டறியும் வாய்ப்பை அமைத்து தருவதே, 'தினமலர்' நடத்தும் 'பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
கோவையில், அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், வரும், 20, 21 ஆகிய தேதிகளில் இந்நிகழ்ச்சி, காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது.
மொத்தம், 50க்கும் மேற்பட்ட பள்ளிக்கல்வி நிறுவனங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. ப்ரீ.கேஜி., முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, ஸ்பாட் அட்மிஷன் உறுதி செய்யலாம். இதில் பங்கேற்க அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியில், நேஷனல் மாடல் குரூப் ஆப் ஸ்கூல் ஸ்பான்சராக உள்ளது. மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி, ஆதித்யா வித்யாஷ்ரம், சமஸ்தி இன்டர்நேஷனல் பள்ளி, சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளி ஆகியவை, நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன.
-- நமது நிருபர் -