sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மஞ்சள் காமாலை மரணம் என்னவெல்லாம் காரணம்; 'அன்னிக்கு காலைல 6 மணி இருக்கும்...

/

மஞ்சள் காமாலை மரணம் என்னவெல்லாம் காரணம்; 'அன்னிக்கு காலைல 6 மணி இருக்கும்...

மஞ்சள் காமாலை மரணம் என்னவெல்லாம் காரணம்; 'அன்னிக்கு காலைல 6 மணி இருக்கும்...

மஞ்சள் காமாலை மரணம் என்னவெல்லாம் காரணம்; 'அன்னிக்கு காலைல 6 மணி இருக்கும்...


ADDED : செப் 20, 2025 11:53 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு...!'

- மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் இந்த காமெடியை, மறக்கவே முடியாது. அந்தளவுக்கு தமிழ் சினிமா களத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த ரோபோ சங்கர், கடைசியில் மஞ்சள் காமாலையிடம் தோற்றுப்போனார்.

மஞ்சள் காமாலை குறித்து, கோவை அரசு மருத்துவமனை உணவு மற்றும் ஜீரணவியல் துறை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜா சிகாமணியிடம் பேசினோம்.

அவர் கூறியதாவது:

ரோபோ சங்கருக்கு ஏற்கனவே கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, சுருக்கமாகி விட்டதாக சொல்லப்பட்டது.

இந்த பாதிப்பால் அவருக்கு மஞ்சள் காமாலை வந்துள்ளது. கல்லீரல் சுருக்கம், உயிருக்கு சுருக்கு கயிறாக மாறும்.மஞ்சள் காமாலை பொதுவாக மதுப்பழக்கம், பித்தப்பையில் கல்லடைப்பு, பித்தக்குழாய் அடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வரும். ரத்த அணுக்கள் விரைவாக உடைவதால் வரும்.

சிறு வயதில் மஞ்சள் காமாலை வந்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. இதில் 'டைரக்ட் பிளுருபின்', 'இன்டயரெக்ட் பிளுருபின்' என, இருவகைகள் உள்ளன.

டைரக்ட் பிளுருபின் இருந்தால் உயிருக்கு ஆபத்து. அது ரத்தத்தில் 1 அல்லது 1.2 மி.கிராம் என்ற அளவில்தான் இருக்கும். இது அதிகரித்தால் பிரச்னை வரும்.

ஈரலில் பிரச்னை இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். நம் நாட்டில், ஈரல் பாதிப்புக்கு, டாஸ்மாக் மதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

இன்று சாதாரண இளைஞர்களும் மது பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி இறக்கின்றனர். ஆகவே, அனைவரும் மது குடிப்பதை நிறுத்த வேண்டும்.

பெண்களை பொறுத்தவரை, 'ஆட்டோ இம்மியூன்' என்ற தசை திசுக்கள் எதிராக வேலை செய்வதாலும் பாதிப்பு வரும்.

காமாலை வந்தால், உடனே நாட்டு வைத்தியத்துக்கு போகக் கூடாது. நோய் தாக்கம் அதிகம் இருக்கும் போது, அது பலன் தராது. இப்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

காமாலைக்கு ஆங்கில மருத்துவரை பார்க்கின்றனர். இதை தடுக்க வைரஸ் தடுப்பூசி உள்ளது. இப்போது குழந்தைகளுக்கே போடப்படுகிறது.

25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போடவில்லை என்றால், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சமச்சீரான உணவு, உறக்கம், உடற்பயிற்சி இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.

நம் நாட்டில், ஈரல் பாதிப்புக்கு, டாஸ்மாக் மதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. பெண்களை பொறுத்தவரை, 'ஆட்டோ இம்மியூன்' என்ற தசை திசுக்கள் எதிராக வேலை செய்வதாலும் பாதிப்பு வரும்.

மஞ்சள் காமாலை

அறிகுறிகள் என்ன?

''மஞ்சள் காமாலை தொற்று உள்ளவர்களுக்கு பசி இருக்காது. உடல் வலி, உடல் சோர்வு இருக்கும். வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். சிறுநீர் மஞ்சள் நிறமாக போகும். சாதாரணமாக சிறுநீர் கழிக்கும்போது, ஒரு முறைதான் மஞ்சள் நிறமாக இருக்கும். காமாலை உள்ளவர்களுக்கு எப்போது போனாலும் மஞ்சள் நிறமாக இருக்கும். சிகரெட் பிடிப்பவர்களுக்கு புகை டேஸ்ட் தெரியாது. தலை சுற்றல், மயக்கம் வரும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே டாக்டரை பார்க்க வேண்டும்,'' என்றார் டாக்டர் ராஜா சிகாமணி.






      Dinamalar
      Follow us