/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேரன்மாநகரில் இதென்ன இவ்வளவு குப்பை!
/
சேரன்மாநகரில் இதென்ன இவ்வளவு குப்பை!
ADDED : ஜன 29, 2026 05:10 AM

அரைகுறை பணி சிங்காநல்லுார் பேருந்து நிறுத்தம் அருகில், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகே, கமலா மில் குட்டை வீதியில், சாக்கடை கால்வாய் தேங்கி நிற்பது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் செய்தால் வெறும் குப்பையை மட்டும் அகற்றுகின்றனர். கால்வாயை துார்வாருவதில்லை.
- சத்யா: சாக்கடையில் மின்கம்பம் தொண்டாமுத்துார் ரோடு, பூசாரிபாளையம், 74வது வார்டில் சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம் உள்ளது. கழிவுநீர் செல்லும்போது அரித்து கம்பத்தின் அடிப்பகுதி சேதமடையக்கூடும். சாக்கடை கால்வாயின் நடுவே ஆபத்தான முறையில் அமைந்துள்ள மின்கம்பத்தை இடமாற்ற வேண்டும்.
- ராபர்ட்: மலையாய் குவியும் குப்பை சேரன்மாநகர், 22வது வார்டு, விஸ்வேஸ்வரா நகர் குடியிருப்பு பகுதியில் சாலையில் தொடர்ந்து குப்பை வீசப்படுகிறது. பாதி சாலை தெரியாத அளவுக்கு குப்பை நிறைந்துள்ளது. குப்பையை அகற்ற வேண்டும். திறந்தவெளியில் குப்பை கொட்டுவதையும் தடுக்க வேண்டும்.
- வாசுதேவன்: பூங்காவில் நாய்கள் வலம் ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்காவில் காலை, மாலை பலர் நடைப்பயிற்சி செய்கின்றனர். பூங்காவில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றுகின்றன. நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு தொந்தரவாக உள்ளது. துரத்தும் நாய்களால் குழந்தைகள் பூங்காவில் விளையாடவே அஞ்சுகின்றனர்.
- ஆறுச்சாமி: தெருவிளக்கு பழுது கிழக்கு மண்டலம், அப்பாஜி கார்டன், ஒன்பதாவது வார்டு, 'எஸ்.பி -28, பி -15' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்குஎரிவதில்லை. இருளால் இந்தப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- லட்சுமி: புதர் மண்டிய சாக்கடை தடாகம் ரோடு, டி.வி.எஸ். நகர், 16வது வார்டில், சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யவில்லை. கால்வாயைச் சுற்றிலும் அடர்த்தியாக புதர் வளர்ந்துள்ளது. கால்வாயில் கழிவுகள் அடைந்து தேங்கி நிற்கிறது. சீரான இடைவெளியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
- கனகராஜ்: நடுரோட்டில் கம்பம் வடக்கு மண்டலம், 26வது வார்டு, ஹட்கோ காலனி பகுதியில் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக டெலிபோன் கம்பம் உள்ளது. 20 அடியே உள்ள இந்தச்சாலையில்,கம்பத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- ஆனந்த்: அழிக்கப்படும் நீர்வழிப்பாதை நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூரிலிருந்து புதுப்பாளையம் வழியாக செல்லும் நீர்வழி ஆற்றுப்பாதையில் தொடர்ந்து கழிவு கொட்டப்படுகிறது. அருகில் உள்ள பூக்கடை, இறைச்சி, மீன் கடை, ஹோட்டல்கள் தங்கள் கழிவை நீர்வழிப்பாதையில் கொட்டி வருகின்றனர்.
- ருக்மணி: டெங்கு அபாயம் திருச்சி ரோடு, ஒண்டிப்புதுார் மேம்பாலம், மிராஜ் தியேட்டர் அருகில், சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி நிற்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
- பிரபாபதி:

